Jawa 42: புல்லட்டு பாட்டில் வரும் "ஜாவா" பைக்கில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..?
கிளாசிக் தோற்றம் கொண்ட ஜாவா பைக்குடன் கொஞ்சம் மாடர்ன் விஷயங்களை சேர்த்தால் அதுதான் "ஜாவா 42"
"கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு!" இது "தி வாரியர்" படத்தில் வரும் பாட்டு. ஆனால் பாருங்கள் படத்தில் ஹீரோ ஜாவா பைக்தான் வைத்திருப்பார். வாவ்..! டைரக்டர் ஏதோ வித்தியாசமா ட்ரை பண்ணிருக்காரே, என்ன ஸ்பெஷல் இந்த ஜாவா பைக்குகளில் அப்படின்னு பார்க்கலாம் . ஜாவாவில் மூன்று பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஜாவா, ஜாவா 42 மற்றும் பேராக். இதில் ஜாவா 42-வை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஒன்பது நிறங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் "ஜாவா 42":
கிளாசிக் தோற்றம் கொண்ட ஜாவா பைக்குடன் கொஞ்சம் மாடர்ன் விஷயங்களை சேர்த்தால் அதுதான் "ஜாவா 42". கொஞ்சம் பழைய ஜாவா கொஞ்சம் புதிய ஜாவா இரண்டின் தோற்றத்தையும் கலந்து செய்ததால் இதற்கு இயல்பாகவே ஒரு ரெட்ரோ கிளாசிக் லுக் கிடைத்துவிடுகிறது. இந்த கிளாசிக் லுக்கை தனித்து காட்டுவதில் இதற்கு கொடுக்கப்பட்டுள்ள 9 விதமான நிறத் தேர்வுகளுக்கு பெரும் பங்குண்டு.
இந்த ஒன்பது விதமான நிறத் தேர்வுகளும் மூன்று வெவ்வேறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மிகவும் ஸ்டைலான வேரியண்ட் என்றால் அது 2.1 தான். மற்ற வேரியண்ட்களில் ஸ்போக் வீல்கள் மற்றும் குரோம்-ஃபினிஷ்டு பாகங்கள் இருக்கும்.
2.1 வேரியண்ட்டில் மட்டும் அலாய் வீல்ஸ் ஸ்டாண்டர்டாக வருகிறது. மேலும் இந்த அலாய் வீல்களுக்கும் இஞ்சினுக்கும் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளதால் மாடர்னாக காட்சியளிக்கிறது. இந்த 2.1 வேரியண்ட் பிரத்யேகமாக ஆல்ஸ்டார் பிளாக், சிரியஸ் ஒயிட் மற்றும் ஓரியன் ரெட் உள்ளிட்ட மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
நிறம் மற்றும் விலை
"ஜாவா 42" சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டிலும் கேலக்டிக் கிரீன், ஹாலீஸ் டீல், லுமோஸ் லைம் மற்றும் ஸ்டார்லைட் ப்ளூ, காமெட் ரெட் மற்றும் நெபுலா ப்ளூ ஆகிய ஆறு வெவ்வேறு நிறத் தேர்வுகள் உள்ளது. இதில் கேலக்டிக் கிரீன், ஹாலீஸ் டீல், லுமோஸ் லைம் மற்றும் ஸ்டார்லைட் ப்ளூ ஆகிய நான்கு நிறங்களும் மேட் ஃபினிஷ்ட். காமெட் ரெட் மற்றும் நெபுலா ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களும் க்ளோசி ஃபினிஷட்.
சென்னையில் ஜாவா 42-வின் ஆன்ரோட் விலை:
சிங்கிள் சேனல் ஏபிஎஸ்: ₹ 2,00,600/- (ஏறக்குறைய)
டூயல் சேனல் ஏபிஎஸ்: ₹ 2,10,500/- (ஏறக்குறைய)
2.1 வேரியண்ட்: ₹ 2,24,500/- (ஏறக்குறைய)
புல்லட் பாடலை பற்றி பேசிவிட்டு புல்லட்டின் விலையை சொல்லாமல் போனால் எப்படி.. சென்னையில் ராயல் என்ஃபீல்ட் புல்லட்டின் ஆன்ரோட் விலை:
புல்லட் கிக் ஸ்டார்ட்: ₹ 1,78,400/- (ஏறக்குறைய)
புல்லட் எலக்ட்ரிக் ஸ்டார்ட்: ₹ 1,87,800/- (ஏறக்குறைய)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்