மேலும் அறிய

Scorpio N: ரூ.11.99 லட்சம் முதல் ரூ.21.45 லட்சம் வரை.. மகேந்திரா ஸ்கார்பியோ-என் கார்களின் விலைப் பட்டியல்!

மகேந்திரா நிறுவனத்தின் புதிய வரவான ஸ்கார்பியோ-என் எஸ்யூவி காரின் விலை மற்றும் கார் புக்கிங் தேதியை அறிவித்துள்ளது.

மகேந்திரா நிறுவனத்தின் புதிய வரவான ஸ்கார்பியோ-என் எஸ்யூவி காரின் விலை மற்றும் கார் புக்கிங் தேதியை அறிவித்துள்ளது.

முற்றிலும் மாறுபட்டது:

மகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளில் விற்பனையில் சக்கைபோடு போட்ட கார்களில் ஸ்கார்பியோவும் ஒன்று. 2002ம் ஆண்டு முதலே  ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு மாறுதல்களோடு வெளியாகிவந்த ஸ்கார்பியோவுக்கு, கார் பிரியர்கள் மத்தியில் எப்பொதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில், ஸ்கார்பியோ-என் என்ற பெயரில் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கார்களை களமிறக்குகிறது மகேந்திரா நிறுவனம். இந்த காரின் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், காருக்கான புக்கிங் தொடங்கும் நாள் மற்றும் வேரியண்ட்களின் விலைகளை அறிவித்துள்ளது மகேந்திரா நிறுவனம்.


Scorpio N: ரூ.11.99 லட்சம் முதல் ரூ.21.45 லட்சம் வரை.. மகேந்திரா ஸ்கார்பியோ-என் கார்களின் விலைப் பட்டியல்!

ஸ்காரிபியோ என் வேரியண்ட்கள்:

ஸ்கார்பியோ என் காரானது 2 வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் என்ற இரண்டு ஆப்ஷன்களில் வருகிறது. அதில் 2 வீல் ட்ரைவ் Z2, Z4, Z6, Z8, Z8L ஆகிய வேரியண்ட்களும், 4 வீல் ட்ரைவில்  Z4, Z8, Z8L ஆகிய வேரியண்ட்களிலும் வருகின்றன. இந்த கார்களின் விலை 11.99 லட்சம் முதல் 21.45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ என் Z4 வேரியண்ட் 15.45 லட்சம் ரூபாய்க்கும், டாப் எண்ட் மாடலான ஸ்கார்பியோ என் Z8L 21.45 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆரம்ப விலையானது இந்த கார்களை முதலில் முன்பதிவு செய்யும் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்றும், இக்கார்களுக்கான முன்பதிவு ஜூலை 30ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஸ்கார்பியோ நிறுவனம் அறிவித்துள்ளது.


Scorpio N: ரூ.11.99 லட்சம் முதல் ரூ.21.45 லட்சம் வரை.. மகேந்திரா ஸ்கார்பியோ-என் கார்களின் விலைப் பட்டியல்!
விலைப் பட்டியல்:

ஸ்கார்பியோ என் காரின் தொடக்க மாடலான Z2 வில் பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 11.99 லட்சம் ரூபாய் என்றும், டீசல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் விலை 12.49 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் இல்லை.

Z4 மாடலில் பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 13.49 லட்சம் ரூபாய் என்றும், பெட்ரோல் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் விலை 15.45 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கார் பெட்ரோல் காரின் விலையை விட 50 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 13.99 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 15.95 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Z6 மாடலில் டீசல் ஆட்டோமேட்டிக், டீசல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என்று இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே வருகிறது. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 14.99 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 16.95 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Z8 மாடலில் பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 16.99 லட்சம் ரூபாய் என்றும், பெட்ரோல் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 18.95 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்  காரின் விலை 17.49 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் காரின் விலை 19.45 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Scorpio N: ரூ.11.99 லட்சம் முதல் ரூ.21.45 லட்சம் வரை.. மகேந்திரா ஸ்கார்பியோ-என் கார்களின் விலைப் பட்டியல்!

டாப் எண்ட் மாடலின் விலை:

ஸ்கார்பியோ என் காரின் டாப் எண்ட் மாடலான Z8Lல் பெட்ரோல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனானது 18.99 லட்சம் ரூபாய்க்கும்,  ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 20.95 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டீசல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 19.49 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் காரின் விலை 21.45 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
Honda ZRV Price: BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
Platina on EMI: டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Embed widget