Fiat Car History: ஃபியட் கார் இல்லாமல் இத்தாலி நாட்டின் வரலாறு இல்லை; 120 ஆண்டுகால பயணத்தின் பாகம் 2!
ஜியோவானி அக்னெலி எப்போதும் சொல்வது இதுதான் "ஃபியட் எப்போதும் அரசின் பக்கமே நிற்கும்"
1922 முசோலினி ஆட்சியை பிடிக்கிறார் அதே காலகட்டத்தில் 1926ல் அரசின் ஆலோசகர் ஆகிறார் Giovanni Agnelli (ஜியோவானி அக்னெலி). அரசுக்கு பக்கபலமாக இருந்ததால் தொழில் பெருகுகிறது. இதே காலகட்டத்தில் இத்தாலியின் முக்கிய செய்தித்தாளான லிஸ்தாம்பா வை (listampa) ஃபியட் வாங்குகிறது. இந்த செய்தித்தாள் ஃபியடுக்கும் அரசுக்கும் பக்கபலமாக இருக்கிறது, ஃபியட் இமேஜை உயர்த்துகிறது. அரசின் பல காண்ட்ராக்ட் பியட்டுக்கு கிடைக்கிறது.
ஜியோவானி அக்னெலி எப்போதும் சொல்வது இதுதான் "ஃபியட் எப்போதும் அரசின் பக்கமே நிற்கும்". 1930களில் அக்னெலி அமெரிக்காவுக்கு பயணம் செய்து போர்ட் மோட்டார் கம்பெனியில் அசம்பிளி லைனை பார்வையிடுகிறார். அந்த தொழில்நுட்பத்தை கொண்டு வந்து இத்தாலியில் மாஸ் புரடொக்சனை ஆரம்பிக்கிறார். 1934-36ல் இரண்டு மாடல்கள் வெளியிடுகின்றனர்.
ஃபியட் டோபோலினோ (Topolino) . இத்தாலிய மொழியில் மிக்கி மௌஸ் என்று பெயர். இது தான் உலகிலேயே முதல் மிகச்சிறிய கார் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனைப் பின்பற்றியே பின்னாளில் பீட்டில் (beetle) தயாரிக்கப்பட்டது.
இன்னொரு மாடல் பலில்லா (balilla) அதுவும் சக்சஸ். இதே காலகட்டத்தில் பியட்டின் முதல் டீசல் டிரக், ட்ரான்ஸ்போர்ட்க்காக தயாரிக்கப்பட்டது. 1930 இறுதியில் ஜியோவானி அக்னெலி 60 வயதாகி இருந்தார். அவருக்குப் பிறகு கம்பெனிய யார் பார்ப்பது என்ற ஒரு நிலை வந்தது. அவர் பையன் ஏட்வார்டோ (Edoardo Agnelli), அவருக்கு ஃபுட்பால் தான் ஆர்வமாக இருந்தார், இத்தாலியின் முக்கியமான டீமில் பங்குபெற்று அந்த டீம் நேஷனல் சம்பியன்ஷிப் ஐந்து முறை வாங்கி இருந்தது, மேலும் ஒரு ஸ்கீயிங் ரிசார்ட் கட்டியிருந்தார். 1935ல் 43 வயதாக இருக்கும்போது ஜெனோவா செல்லும்போது விமான விபத்தில் இறந்துவிட்டார்.
ஜியோவானி அக்னெலி உடைந்து போனார்.. அடுத்து யார் என்று பார்த்தால் எட்வார்டோவின் பையன் ஜானி ( Gianni Agnelli) . 14 வயதான ஜானிதான் தனது வாரிசு என முடிவு செய்து அவரை நகரத்திற்கு அனுப்பி படிக்க சொல்கிறார். சாதாரண பின்புலத்திலிருந்து திடீரென நகரத்துக்கு அனுப்பப்டுகிறார்.
பின்னர் படிப்பு பாடத்தை விட அனுபவ பாடம் சிறந்தது என பின்னர் அமெரிக்காவிற்கு செல்கிறார் அவர்.1940ல் சட்டக் கல்லூரியில் பயில்கிறார். இந்த காலகட்டத்தில் இத்தாலியில் மறுபடியும் போர். ஜியோவானி அக்னெலி ஜானி போரில் பங்கெடுக்க வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் ஜானி போரில் பங்கு எடுக்கிறார்.
1943ல் முசோலினியின் ஆட்சி தூக்கி எறியப்படுகிறது, இந்த காலகட்டத்தில் ஃபியட் கவர்மெண்ட் ஆர்டர் கைநிறைய எடுக்கிறது, ட்ரக்குகள், விமானங்கள் துப்பாக்கிகள், ஆம்புலன்ஸ் என பல தயாரிப்புகள் அரசுக்காக. முசோலினி தோற்ப்பார் என்று தெரியும் கட்டத்தில் நேச நாடுகளிடம் உடன் படிக்கையோடு அவர்களுக்கு உதவுகிறார். அதற்கு பிரதிபலனாக அவர்கள் ஃபியட் ஃபேக்டரி மேலே குண்டு போட மாட்டார்கள். இருந்தாலும் சில பாக்டரிகள் குண்டுவீச்சில் சேதமடைந்தது
1945ல் இத்தாலியில் புதிய அரசாங்கம் வந்தது.ஜியோவானி அக்னெலி குடும்பம் பியட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அனுப்பியது, காரணம் முசோலினிக்கு உதவியாக இருந்தார்கள் என்று கருதியதால். இந்த கவலையிலேயே 1945ல்
ஜியோவானி அக்னெலி இறக்கிறார். ஜானிக்கு இளம்வயது அவரால் தலைமை ஏற்பது கடினம் அப்போ யார் பியட்டை வழிநடத்துவது எனும்போது விக்டோரியா வேலன்டா (Victoria valenta) பியட்டின் நிர்வாக குழுவில் உயர் மட்டத்தில் இருந்தவர் சேர்மனாக பதவி ஏற்கிறார். இந்த காலகட்டத்தில் 90 சதவிகித இத்தாலி மார்கெட் பியட்டிடம் இருந்தது. ஏர் கண்டிசனிங் சிஸ்டம் கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே காலகட்டத்தில் கப்பல் மற்றும் விமான இன்ஜின்களில் ஆராய்ச்சிகள் முடுக்கப்பட்டன.
1951ல் ஜி380 விமானம் தயாரிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் பெரிய தொழில்களுக்கு இல்லாமல் சிறிய ரக தொழில்களில் கவனம் செலுத்தினர். டீசல் இன்ஜின் கார்கள் தயாரிக்கப்பட்டன.1960வரை விற்பனை கொடிகட்டிப் பறந்தது, நாடும் மிகப்பெரிய முன்னேற்றத்தில் இருந்ததால் விற்பனையும் மிக அதிகமாகவே இருந்தது.
ஜானி அக்னெல்லி இந்த காலகட்டத்தில் பிளேபாய்யாக சுற்றிக் கொண்டிருந்தார். சர்ச்சிலின் மருமகளுடன் வாழ்ந்தார்.. 1952 அவருடன் ஏற்பட்ட ஒரு சண்டையில் தனது பெராரியை எடுத்துக் கொண்டு கோபமாக வெளியேறும்போது விபத்தில் சிக்கி காலில் ஆறு இடங்களில் எலும்பு உடைந்தது. கால் சிதிலமடைந்து மீண்டு வருவது கடினம் என எல்லோரும் சொல்ல அதிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு மறுபடியும் நீச்சல் ஸ்கீயிங் என எல்லாத்தையும் தொடர்ந்தார்.
1953ல் ஒரு நிலைக்கு வந்து மணெல்லா என்பவரை திருமணம் செய்தார். ஒரு பையன் அதற்கு பின் ஒரு பெண்.
1953ல் மிக முக்கியமான லான்ச் ஃபியட் 500 அப்போது உடன் இருந்தார் ஆனால் பியட்டில் பங்கு பெறவில்லை.
20 வருடங்கள் விக்டோரியாவே கம்பெனியை வழிநடத்தினார். 1966ல் 83ஆம்வயதில் விக்டோரியா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஜானி46 வயதில் பியட்டின் சேர்மனாக பொறுப்பேற்றார். பின்னால் இத்தாலி தவிர வெளிநாடுகளிலும் வளர்ந்தது. பிரேசில், பாகிஸ்தான், சோவியத் யூனியனிலும் ஃபேக்டரி திறக்கப்பட்டது. ஜானி இத்தாலியின் அம்பாசிடராகவே பார்க்கப்பட்டார்.1945ல் ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் இப்போது ஒருநாளில் தயாரிக்கப்பட்டன. ஜானி கம்பனியின் முகமாக மாறினார், ஒரு பிராண்ட் அம்பாசிடராக எல்லா நாட்டுக்கும் பயணித்தார்.
தொழிலாளர் யூனியன் பிரச்சனைகளும் தலைதூக்கி இருந்தன. அதேசமயம், பியட் 127 கார் 1971ல் வெளிவந்து வெற்றி பெற்றது. கார் ஆப் த இயர் பட்டமும் வாங்கியது. இது பியட்டின் ஃப்ரண்ட் வீல் டிரைவ் மாடல். மிகவும் சக்சஸ் புல் மாடலும் கூட.
ஜானி அகனெல்லி தொழிற்சாலைகளை ஆட்டோமேஷன் செய்ய ஆரம்பித்தார், ரோபாட்டிக்ஸ் அஸம்ப்ளி லைன் உருவாக்கப்பட்டது. உலகில் ஐந்தாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் கம்பெனியாக இருந்தது. அதை மூன்றாவது பெரிய கம்பெனி ஆக மாற்ற வேண்டும் என்ற கனவோடு இருந்தார். அதை எப்படி செய்வது என்றால் மற்ற கம்பெனிகளை வாங்கி தனது மார்க்கெட் ஷேரை அதிகப்படுத்த வேண்டும் என நினைத்தார்.
1967ல் ஆட்டோ பியாங்க்கி
1969ல் லான்சியா
1969ல் 50% பெராரி ஷேர் மற்றும் கம்பெனி கண்ட்ரோல் பின்னர் இது 83% ஆக்கப்பட்டது.
1971 -அபார்த்
1986 ஆல்பா ரோமியோ
1993 -மாசெராட்டி ,
2007 - ஃபியட் புரொபசனல்
2009- Chrysler group (Chrysler, dodge, Jeep &Ram truck)
பியட் எப்படி பெராரியை வாங்கியது என்பதை 2019ல் வந்த Ford vs Ferrari படத்தில் நன்கு காட்டியிருப்பார்கள். போர்டே ஃபெராரியை வாங்க இருந்தது, ஆனால் ஃபோர்டு நிர்வாகக்குழு பெராரியை ஒருகார் கம்பெனியாகவே நினைத்து வாங்கிய பின் ஃபெராரி ரேஸ்களில் கலந்து கொள்ள ஃபோர்டு அனுமதி தேவை எனும் விதியை நுழைந்துள்ளனர். என்ஸோ பெராரிக்கு இது கோபத்தை அளித்தது, அதே நேரத்தில் ஃபியட் 50% பங்குகளை அதிக விலைக்கு வாங்கவும் என்ஸோ ஃபெராரியே பெராரியை வழிநடத்தவும் ரேஸ்களில் பங்கெடுக்கவும் அனுமதித்தது. போர்டு தரப்பிலிருந்து பெராரி பங்கின் விலையை அதிகரிக்க போர்டை உபயோகப்படுத்திக் கொண்டனர் எனவும் சொல்வார்கள்.
இதே நேரத்தில் பியட்டில் பிரச்சினைகளும் தலைதூக்கின, மேனேஜ்மென்டில் உள்ள பிரச்சினை, ஜானி மற்றும் அவர் சகோதரர் ஆல்பெர்டோ நிர்வாகக் குழுவை மாற்ற விரும்பினார். மிகவும் பழமையான பல அடுக்குகள் இருந்த நிர்வாகக் குழுவின் நிலையை மாற்றி, பல கம்பெனிகளையும் தனித்தனியே ஆக்க விரும்பினர்.
நிர்வாக குழு சண்டை, தொழிற்சாலையை மாடர்ன் செய்யாதது, தோல்வியடைந்த மாடல்கள், க்வாலிட்டி பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் ஆட்டுவித்தன. அதுமட்டுமில்லாமல் கம்யூனிஸ்ட் பார்ட்டி யூனியனில் டாமினேட் செய்ய ஆரம்பித்தது. தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள், வேலைநிறுத்தம் என தொழிற்சாலையை பாதித்தது. அந்த நேரத்தில் இத்தாலிய சட்டங்கள் யாரையும் வேலையிலிருந்து நிறுத்த அனுமதிக்கவில்லை. 1974ல் பெட்ரோல் விலை மிக அதிகமாக உயர்ந்தது இதே காலகட்டத்தில் விற்பனை 40 சதவீதமாக சரிந்தது.
இதை சரிசெய்ய 20 சதவிகிதம் சம்பளம் உயர்த்தி தர ஃபியட் ஒப்புக் கொண்டது ஆனாலும் அப்போது அங்கு இன்ஃப்லேஷன் 20% ஆக இருந்ததால் இதை யூனியன்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படியே தொடர்ந்தால் திவாலாகிவிடும் நிலைக்குச் சென்றது ஃபியட். இதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதை அடுத்து பார்க்கலாம்.