ரூபாய் 75 ஆயிரம் டிஸ்கவுண்ட்.. ரூபாய் 5 லட்சத்திற்கும் கீழே போன Grand i10 Nios காரின் விலை!
Grand i10 Nios: ஹுண்டாய் நிறுவனத்தின் Grand i10 Nios காருக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் புதியதாக கார் வாங்க விரும்புபவர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கும் கார்களில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹுண்டாய் நிறுவனம் தனது பல தயாரிப்புகளுக்கு விலையை குறைத்துள்ளது.
Grand i10 Nios:
அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனத்தின் முக்கியமான படைப்பு Grand i10 Nios ஆகும். ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு பெருமளவில் விலை குறைக்கப்பட்ட கார்களின் Grand i10 Nios மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த காருக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
75 ஆயிரம் தள்ளுபடி:
இந்த காருக்கு மட்டும் ரூபாய் 30 ஆயிரம் ரொக்கமாக தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் , கார்ப்பரேட் ஆஃபராக மட்டும் ரூபாய் 45 ஆயிரம் அளித்துள்ளனர். மொத்தமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழாக்கால சலுகையாக ரூபாய் 75 ஆயிரத்தை இந்த Grand i10 Nios காருக்கு ஹுண்டாய் நிறுவனம் அளித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் இந்த காருக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் தொடக்க விலை ரூபாய் 5.47 லட்சம் ஆகும். தற்போது 75 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதால், இந்த காரின் ஷோ ரூமின் விலை ரூபாய் 5 லட்சத்திற்கும் கீழே செல்கிறது. இதர செலவுகள் உள்பட 5.50 லட்சம் ரூபாய்க்கு கீழே இந்த காரை வாங்க இயலும்.
18 கி.மீட்டர் மைலேஜ்:
இந்த கார் லிட்டருக்கு 18 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இதுவாகும். மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் காராகவும் இது உள்ளது. 5 இருக்கைககள் கொண்டது இந்த கார். நடுத்தர குடும்பத்தினர் செல்ல ஏற்ற வாகனம் இதுவாகும். 4 ஆயிரம் ஆர்பிஎம் டார்க் இழுதிறன் கொண்டது இந்த கார்.
37 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்பும் பெட்ரோல் டேங்கர் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. பவர் ஸ்டீயரிங், ஏபிஎஸ் ப்ரேக் வசதி, ஏசி, ஏர்பேக் என பல அம்சங்களை கொண்டது. 5 கியர்களை கொண்டது. 15 வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது. ஆட்டோமெட்டிக் காரில் மட்டும் 6 வேரியண்ட்கள் உள்ளது.
இந்த கார் மட்டுமின்றி எக்ஸ்டர், ஆரா, அயோனிக், வெர்னா போன்ற மற்ற கார்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.





















