Hyundai New Cars: இதுவே முதன்முறை.. ஆஃப்ரோட் காரை அறிமுகப்படுத்தப்போகும் ஹுண்டாய் - தாக்குப் பிடிக்குமா தார்?
Hyundai New Cars: ஆஃப் ரோடில் முன்னணி வாகனமாக உள்ள தாருக்குப் போட்டியாக புதிய காரை அறிமுகப்படுத்த ஹுண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது. இதுவே அந்த நிறுவனத்தின் முதல் ஆஃப்ரோட் வாகனம் ஆகும்.

Hyundai New Cars: இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். கிரெட்டா, வெனுயூ, எக்ஸ்டர், கிராண்ட்ஐ10 நியாஸ், ஐ20, ஆரா என பல வெற்றிகரமான கார்களை ஹுண்டாய் நிறுவனம் தயாரித்து சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது.
தாருக்குப் போட்டியாக ஹுண்டாயின் ஆஃப் ரோட் கார்:
ஆனாலும், ஹுண்டாய் இதுவரை ஆஃப் ரோட் வாகனத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. இதையடுத்து, ஆஃப் ரோட் வாகனத்தை தயாரித்து அறிமுகப்படுத்த ஹுண்டாய் முடிவு செய்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆஃப்ரோட் வாகனமாக தார் மற்றும் தார் ராக்ஸ் கார் விற்பனையில் அசத்தி வருகிறது. மாருதியில் ஜிம்னி கார் ஆஃப் ரோட் வாகனமாக இருந்தாலும், ஆஃப் ரோட் வாகனம் என்றால் அனைவரது முதன்மைத் தேர்வாக தற்போது தார் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில், மஹிந்திராவின் தார் நிறுவனத்திற்கு இந்த காரை சந்தையில் அறிமுகப்படுத்த ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த ஆஃப் ரோட் வாகனம் பற்றி வேறு எந்த தகவலும் இதுவரை தெரியப்படுத்தவில்லை. இந்த கார் பெட்ரோல் அல்லது டீசல் எதில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது என்றும் தெரியவில்லை.
2030க்குள் 26 கார்கள்:
ஹுண்டாய் நிறுவனம் 2030ம் ஆண்டுக்குள் மொத்தம் 26 கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில் 7 கார்கள் முற்றிலும் புதிய பெயர்களுடன் புதிய வடிவங்களில் உருவாக உள்ளது. ஆஃப் ரோட் வாகனம் மட்டுமின்றி எம்பிவி வாகனத்தை தயாரிக்கவும் ஹுண்டாய் முடிவு செய்துள்ளது.
எம்பிவி தயாரிப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், டொயோட்டா நிறுவனத்தின் இன்னவோ காருக்குப் போட்டியாக இந்த காரைத் தயாரிக்க ஹுண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹுண்டாய் அல்காசர் காரின் சிறப்பம்ங்கள் இந்த காரில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தைக்கு வரப்போகும் புதுப்புது கார்கள்:
ஜிஎஸ்டி வரி குறைப்பிற்குப் பிறகு இந்தியாவில் கார்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது. கார்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பல்வேறு மாடல்களில், பல்வேறு வசதிகளில் கார்களை நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர். தற்போது இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களாக ஹுண்டாய், மஹிந்திரா, மாருதி சுசுகி, டொயோட்டா, நிசான், ஸ்கோடா, டாடா போன்ற நிறுவனங்கள் முன்னணி கார் விற்பனை நிறுவனங்களாக உள்ளது.
இந்த நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் அதிகளவு அதிக வசதிகளை கொண்ட கார்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.





















