Best CNG Car Under Rs 10 Lakh: ஹூண்டாய் எக்ஸ்டெர் சிஎன்ஜி vs டாடா பஞ்ச் சிஎன்ஜி - எந்த கார் சிறந்தது?
Hyundai Exter vs Tata Punch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சிறந்த சிஎன்ஜி காரின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Hyundai Exter vs Tata Punch: ஹுண்டாய் எக்ஸ்டெர் மற்றும் டாடா பஞ்ச் ஆகிய இரண்டு சிஎன்ஜி வெர்ஷன்களின் ஒப்பீட்டை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஹுண்டாய் எக்ஸ்டெர் Vs டாடா பஞ்ச் சிஎன்ஜி
புதிய CNG காரை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, சந்தையில் தற்போது பல ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஆப்ஷன்களிலிருந்து ஒரு நல்ல காரை தேர்வு செய்வதே கார் வாங்க நினைப்போரின் பிரதான பணியாகும். குறிப்பாக பலருக்கு Tata Punch CNG வாங்கலாமா அல்லது Hyundai Exter CNG வாங்கலாமா என்ற குழப்பம் உள்ளது. இப்போது இந்த இரண்டு கார்களில் எது சிறந்தது என்பதை இங்கே அறியலாம்.
எக்ஸ்டெர் Vs பஞ்ச் சிஎன்ஜி : இன்ஜின் விவரம்
ஹூண்டாய் தனது சிஎன்ஜி காரான எக்ஸ்டெர் சிஎன்ஜி டியோவில் 1.2 லிட்டர் இரட்டை எரிபொருள் இன்ஜினை வழங்கியுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கும் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 69 பிஎஸ் பவரையும், 95.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய சிஎன்ஜி கார் 27.1 கிமீ மைலேஜ் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், டாடா பஞ்ச் சிஎன்ஜி பற்றி பேசுகையில், நிறுவனம் இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் இன்ஜினை வழங்கியுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 73.5 பிஎஸ் பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உள்ளது. இன்ஜினைப் பொறுத்தவரை, எக்ஸ்டெரை விட டாடா பன்ச் சிஎன்ஜி அதிக சக்திவாய்ந்த இன்ஜினைக் கொண்டுள்ளது.
எக்ஸ்டெர் Vs பஞ்ச் சிஎன்ஜி : தொழில்நுட்ப அம்சங்கள்
அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஹூண்டாய் எக்ஸ்டெர் சிஎன்ஜி ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி டெயில் லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, ஆறு ஏர்பேக்குகள், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இஎஸ்சி, எச்ஏசி போன்ற பல சிறந்த அம்சங்களை வழங்குகிறது. இது காருக்கு மேலும் அசத்தலான தோற்றத்தை அளிக்கிறது.
Tata Punch CNG பற்றி பேசுகையில், இது ட்ரை-அரோ ஃபினிஷ் ஃப்ரண்ட் கிரில், சி பில்லர், மவுண்டட் டோர் ஹேண்டில், ஸ்டைலிஷ் டர்ன் இண்டிகேட்டர், ORVM, மேனுவல் ஏசி, பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் விண்டோ, ஆட்டோ ஹெட் லேம்ப் போன்ற சிறந்த அம்சங்களை வழங்குகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களும் உள்ளன. இது தவிர, இந்த காரில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் ஆகியவையும் உள்ளன.
எக்ஸ்டெர் Vs பஞ்ச் சிஎன்ஜி : விலை விவரம்
ஹூண்டாய் Xter Hi-CNG Duo S வேரியண்ட் ரூ.8.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், டாப் மாடலின் விலை ரூ.9.38 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tata Punch CNG விலை ரூ. 7.23 லட்சத்தில் இருந்து ரூ. 9.85 லட்சம் வர நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, டாடா பஞ்ச் சிஎன்ஜியில் 210 லிட்டர் பூட் ஸ்பேஸும் கிடைக்கிறது. விலை அடிப்படையில் Tata Punch CNG பல விஷயங்களில் Hyundai Exeter CNG ஐ விட சிறந்தது என்று கூறலாம். டாடா பன்ச் சிஎன்ஜி அம்சங்களிலும் ஹூண்டாய் எக்ஸ்டெரை விட சற்று முன்னிலையில் உள்ளது.