மேலும் அறிய

Hyundai Creta facelift: ஹுண்டாய் ஃபேஸ்லிப்டிற்கு அதிகரிக்கும் டிமேண்ட் - காத்திருப்பு காலம் இத்தனை மாதங்களா?

Hyundai Creta facelift: தேவை அதிகரிப்பால் ஹுண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது.

Hyundai Creta facelift: ஹுண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா மாடலில், SX(O) வேரியண்ட்  மிகவும் பிரபலமானதாக உள்ளது.

கிரேட்டா ஃபேஸ்லிப்டிற்கான காத்திருப்பு நேரம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல்,  அறிமுகப்படுத்தப்பட்டு 10 நாட்களான நிலையில், அதன் டெலிவரிக்கான காத்திருப்பு நேரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கிரேட்டா மாடலானது ரூ. 11 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான விலையில்,  ஐந்து எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் விருப்பங்கள் உட்பட 19 வேரியண்ட்களை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கிறது. வழக்கம்போல் இந்த மாடலின் டாப் எண்ட் வேரியண்டிற்கு சந்தையில் அதிக தேவை காணப்படுகிறது.

கிரேட்டாவிற்கான காத்திருப்பு காலம்:

116 ஹெச்பி, 1.5 லிட்டர் யூனிட் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வரும் ஹூண்டாய் க்ரெட்டா டீசல், நீண்ட காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளது என்று டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது,இன்று முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், தங்கள் கிரேட்டா டீசல் வேரியண்டை டெலிவரி எடுக்க 4-5 மாதங்கள் காத்திருக்க வேண்டும். Creta ஆனது 115hp, 1.5-லிட்டர் இயற்கையான ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இது  6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்ம்ஷன் விருப்பங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு ஒரு புதிய 160hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்பிளான்ட் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோவைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு பெட்ரோல் பதிப்புகளுக்கான காத்திருப்பு காலம் 3-4 மாதங்களாக உள்ளது.

மேலும் படிக்க: எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஹுண்டாய் கிரேட்டா ஃபேஸ்லிப்ட் - விலை எவ்வளவு?

ஹுண்டாய் கிரேட்டா வேரியண்ட்ஸ்:

விற்பனையில் உள்ள ஏழு டிரிம் நிலைகளில், ஃபேஸ்லிப்ட் கிரேட்டா மாடலில் டாப் எண்ட் வேரியண்டான எஸ்எக்ஸ்(ஓ) டிரிமை  வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு வேர்யண்ட்களிலும் கிடைக்கிறது. இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனைப் பொறுத்து, க்ரெட்டா எஸ்எக்ஸ்(ஓ) விலை ரூ.17.24 லட்சம் முதல் 20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மிட் ரேஞ்ச்சான எஸ் வேரியண்ட் - 1.5 பெட்ரோல்-மேனுவல் மற்றும் 1.5 டீசல்-மேனுவல் வடிவத்தில் கிடைக்கிறது. அதன் விலை முறையே ரூ. 13.39 லட்சம் முதல் ரூ.14.82 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் கடைசி வேரியண்டாக இது உள்ளது என்று டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதனிடையே, கிரேட்டா ஃபேஸ்லிப்ட் மாடல் ஏழு வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது. இதில்,  அபிஸ் பிளாக் நிறத்திற்கு அதிக தேவை காணப்படுகிறது. அதே நேரத்தில் டைட்டன் கிரே நிறத்திலான கார் வாடிக்கையாளர்களை வெகு குறைவாகவே கவர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Embed widget