மேலும் அறிய

Honda City Facelift: மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?

Honda City Facelift 2026: ஹோண்டா தனது மக்களின் மனம் கவர்ந்த செடான் காரான ஹோண்டா சிட்டியின் ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கான டெஸ்டிங் தொடங்கியுள்ளது.

ஹோண்டா நிறுவனம், மக்களிடையே நன்கு அறியப்பட்ட தனது செடான் காரான சிட்டியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில் அதன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டியின் உருமறைக்கப்பட்ட சோதனை மாதிரிகள், பிரேசிலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது, அதன் அறிமுகத்தை உறுதி செய்கிறது.

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் எப்போது வெளியாகும்.?

ஹோண்டா நிறுவனம், 2028-ம் ஆண்டு வாக்கில், அடுத்த தலைமுறை சிட்டியை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்த ஃபேஸ்லிஃப்ட்-ஐ இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த காலக்கெடு, வரவிருக்கும் மேம்படுத்தல் ஒரு முழுமையான மாற்றத்தை விட, நுட்பமான செம்மைப்படுத்துதலில் அதிக கவனம் செலுத்தும் என்பதைக் குறிக்கிறது.

புதிய சிட்டியின் அளவு

அளவைப் பொறுத்தவரை, இந்த செடான் பெரும்பாலும் மாற்றமின்றியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட பம்பர்கள் காரணமாக சில சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கலாம். காரின் உட்புறத் தோற்றத்தை மேம்படுத்தும் வகையில், ஹோண்டா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட இருக்கை உறைகளை அறிமுகப்படுத்தக்கூடும்.

ஃபேஸ்லிஃப்ட்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன.?

உளவுப் படங்களை பார்க்கும்போது, புதுப்பிக்கப்பட்ட சிட்டி பெரிய மாற்றங்களை விட, நுட்பமான வடிவமைப்பு மாற்றங்களை பெறும் என்று தெரிகிறது. அவற்றில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில், மேலும் எடுப்பான முன்பக்க பம்பர் மற்றும் கூர்மையான, ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் மேம்படுத்தப்பட்ட ஹெட்லேம்ப்கள் ஆகியவை அடங்கும்.

சில அறிக்கைகள் இதன் ஸ்டைலிங் அம்சங்கள் சமீபத்திய ஹோண்டா சிவிக்கிலிருந்து ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. பக்கவாட்டு தோற்றத்தில், புதிய அலாய் வீல்கள் இடம்பெறலாம், அதே நேரத்தில் பின்பக்கத்தில் திருத்தப்பட்ட பம்பர் விவரங்கள் இடம்பெறக்கூடும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த அப்டேட்டில் தற்போதைய பெரும்பாலான உபகரணங்கள்  அப்படியே தக்கவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள இந்திய மாடலில், 8-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 8-ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பு ஆகியவை அடங்கும். இவைகளுடன், ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், PM 2.5 ஏர் ஃபில்டர், மற்றும் லெதர் சுற்றப்பட்ட கியர் நாப் ஆகியவை அடங்கும். லெவல் 2 ADAS அம்சங்களுடன், பாதுகாப்பு ஒரு வலுவான அம்சமாக தொடர்கிறது.

இந்திய சந்தையில், 2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 360-டிகிரி கேமரா மற்றும் காற்றோட்ட வசதியுள்ள இருக்கைகள் போன்ற கூடுதல் அம்சங்கள் இடம்பெறலாம். இருப்பினும், பிரேசிலிய சோதனை மாடலில் காணப்பட்ட சில மாற்றங்கள், அந்த சந்தைக்கு மட்டுமே பிரத்யேகமானவையாக இருக்கலாம். இருப்பினும், 2023 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் காணப்பட்டதைப் போலவே, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு மாடல்களிலும், பல மேம்படுத்தல்கள் இடம்பெற வலுவான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எஞ்சின்.?

எஞ்சின் ரீதியாக, இந்த ஃபேஸ்லிஃப்ட் இரண்டு சந்தைகளிலும் தற்போதுள்ள என்ஜின் தேர்வுகளையே தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில், 2026 சிட்டி மாடலில், 121 PS மற்றும் 145 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் அதே 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் E20 எரிபொருள் பயன்பாட்டிற்கு இணக்கமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த தகவல்கள், ஹோண்டா சிட்டி பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளன. புதிய செடானிற்கு திட்டமிடுபவர்கள், சிறிது காலம் காத்திருந்தால், உங்கள் ஃபேரரைட்டான ஹோண்டா சிட்டி காரையே வாங்கலாம்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Duster Vs Kushaq Base Variant: ரெனால்ட் டஸ்ட்ரா.? ஸ்கோடா குஷாக்கா.? அடிப்படை மாடலில் எதில் அம்சங்கள் அதிகம்.? எந்த கார் பெஸ்ட்.?
ரெனால்ட் டஸ்ட்ரா.? ஸ்கோடா குஷாக்கா.? அடிப்படை மாடலில் எதில் அம்சங்கள் அதிகம்.? எந்த கார் பெஸ்ட்.?
Honda City Facelift: மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?
மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?
Discount On Cars: லட்சக்கணக்கில் சேமிக்க அரிய வாய்ப்பு.. எம்ஜி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி! இம்மாதம் மட்டுமே இந்த சலுகை
லட்சக்கணக்கில் சேமிக்க அரிய வாய்ப்பு.. எம்ஜி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி! இம்மாதம் மட்டுமே இந்த சலுகை
டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?
டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Kamal Haasan: ” கமல் செய்தது தியாகம்” திமுக ஆதரவு அறிவித்த பின் முதல்வரின் உருக்கமான வார்த்தைகள்
MK Stalin on Kamal Haasan: ” கமல் செய்தது தியாகம்” திமுக ஆதரவு அறிவித்த பின் முதல்வரின் உருக்கமான வார்த்தைகள்
MNM quits Election 2026: தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
MNM quits Election 2026: தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
DMK DMDK Seat Sharing: திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
US Iran War Trump Modi: மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
Strait of Hormuz: எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
Duster Vs Kushaq Base Variant: ரெனால்ட் டஸ்ட்ரா.? ஸ்கோடா குஷாக்கா.? அடிப்படை மாடலில் எதில் அம்சங்கள் அதிகம்.? எந்த கார் பெஸ்ட்.?
ரெனால்ட் டஸ்ட்ரா.? ஸ்கோடா குஷாக்கா.? அடிப்படை மாடலில் எதில் அம்சங்கள் அதிகம்.? எந்த கார் பெஸ்ட்.?
GOLD SILVER RATE Mar. 24th: இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
Embed widget