மேலும் அறிய

MK Stalin on Kamal Haasan: ” கமல் செய்தது தியாகம்” திமுக ஆதரவு அறிவித்த பின் முதல்வரின் உருக்கமான வார்த்தைகள்

"இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார், உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான் என கமல்ஹாசனின் முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட போவதில்லை, திமுகவுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்த நிலையில் கமல் செய்திருப்பது தியாகம்,  எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

தேர்தலில் விலகிய மநீம

தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக விறுவிறுப்பாக ஈடுப்பட்டு வருகிறது.  திமுகவுடன் கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா சீட் வாங்கி நாடாளுமன்றம் சென்றார். இந்தநிலையில் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்படையதாக இல்லை. அவர்களது தரப்பில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்கிறேன். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடப் போவதில்லை, திமுக கூட்டணி வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற முடிவை திறந்த மனதுடன் எடுத்துள்ளோம். இது தியாகம் அல்ல கடமை என கூறியிருந்தார்.

முதல்வர் பதிவு:

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதில் கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். அதில் அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம்.

கமல் செய்தது தியாகம் தான்:

"இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” என தெரிவித்துள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Embed widget