Hero Xtreme 125R: அப்படி போடு! அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் - அதுவும் இவ்வளவு குறைந்த விலையிலா?
Hero Xtreme 125R: ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 125R மாடல் மோட்டார் சைக்கிள் , இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Hero Xtreme 125R: ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 125R மாடல் மோட்டார் சைக்கிள் விலை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 95 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Hero Xtreme 125R மோட்டார்சைக்கிள்:
ஹீரோ நிறுவனம் 125சிசி செக்மெண்டில் புதிய மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக, கடந்த ஆண்டு மத்தியிலேயே பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பான புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்பு கூட இணையத்தில் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இன்று நடைபெறும் ஹீரோ வோர்ல்ட் நிகழ்வில், எக்ஸ்ட்ரீம் 125ஆர் மாடல் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 95 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிப்ரவர் மாதம் 20ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் ஹீரோ டிவிஎஸ் ரைடர் , பஜாஜ் பல்சர் என்எஸ்125 மாடல்களுக்கு நேரடி போட்டியாக அமைந்துள்ளது.
Excitement in every pedal stroke! The moment you've been waiting for is here - the #Xtreme125R launched at INR 95,000 (Ex Showroom Price Delhi). Unleash unparalleled performance without breaking the bank. Available in your nearby dealerships from 20th Feb '24
— Hero MotoCorp (@HeroMotoCorp) January 23, 2024
Hero Xtreme 125R வடிவமைப்பு:
IBS மற்றும் ஒற்றை-சேனல் ABS என இரண்டு வகைகளில் இந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது. பைக் ஒரு பெரிய பெட்ரோல் டேங்குடன் ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பெரிய கவசங்களால் சூழப்பட்டுள்ளது. கவாஸாகி இசட்1000 மற்றும் புதிய ஹோண்டா சிபி1000 ஹார்னெட் மாடல்களில் இருப்பதை போன்று, ஆக்ரோஷமான தோற்றமுடைய எல்.ஈ.டி., முகப்பு விளக்கு இடம்பெற்றுள்ளது. ஆனாலும், மேலே உள்ள இரட்டை பைலட் LED விளக்குகள் இந்த மோட்டார்சைக்கிளுக்கு அதன் சொந்த அடையாளத்தை வழங்குகின்றன. நேர்த்தியான LED இண்டிகேட்டர்களும் தனித்துவத்தை அதிகரிக்கிறது. பிரீமியம் உணர்வை அதிகரிக்க வெள்ளி நிற பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பிலிட் இருக்கை அமைப்பு இதன் ஸ்போர்ட்டி லுக்கை அதிகரித்துள்ளது. எக்ஸாஸ்ட் இளமையாகத் தெரிவதோடு மற்ற ஹீரோ 125சிசி செக்மெண்ட் மோட்டார்சைக்கிளில் இருந்து வேறுபட்டடுள்ளது. உயரமான வால் பகுதியுடன், பின்புற சப்ஃப்ரேம் நிச்சயமாக ஹீரோவின் தற்போதைய 125களில் இருந்து வேறுபட்டுள்ளது. சஸ்பென்ஷன் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் மூலம் கையாளப்படுகிறது. பைக்கில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
Hero Xtreme 125R புதிய 125 cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினை கொண்டுள்ளது. 8,250 rpm-ல் 11.39 bhp ஆற்றல் வெளிப்பாட்டுடன் ட்யூன் செய்யப்பட்டு, 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 5.9 வினாடிகளில் மணிக்கு 0-60 கிமீ வேகத்தில் செல்லும் இந்த வாகனம், லிட்டருக்கு 66 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபால்ட் ப்ளூ, ஃபயர்ஸ்டார்ம் ரெட் மற்றும் ஸ்டாலியன் பிளாக் ஆகிய 3 வண்ணங்களில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.