Hero Splendor Xtec: ஹீரோ நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர்+ Xtec 2.0 மாடல் பைக் அறிமுகம் - கம்மி விலையில் 73கிமி மைலேஜ்
Hero Splendor Plus Xtec: ஹீரோ நிறுவனத்தின் புதிய ஸ்ப்ளெண்டர் Xtec 2.0 மாடல் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Hero Splendor Plus Xtec: ஹீரோ நிறுவனத்தின் புதிய ஸ்ப்ளெண்டர் Xtec 2.0 மாடல் விலை, 82 ஆயிரத்து 911 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec 2.0:
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஸ்ப்ளெண்டர் பைக் மாடலை அறிமுகப்படுத்தி, 30 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் விதமாக ஸ்ப்ளெண்டர் பிளஸ் XTEC 2.0 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை 82 ஆயிரத்து 911 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ப்ளெண்டர் மாடல் உலக அளவில் அதிகம் விற்பனையான மோட்டார் சைக்கிள் என்பதோடு, பல பிரீமியம் அம்சங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஜின் விவரங்கள்:
ஹீரோ ஸ்பிளெண்டர எளிமையான ஏர்-கூல்ட், 97.2சிசி, ஸ்லோப்பர் இன்ஜினை கொண்டு இயங்குகிறது. இது 8,000ஆர்பிஎம்மில் 8.02 ஹெச்பி மற்றும் 6,000ஆர்பிஎம்மில் 8.05என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. 100சிசி பயணிகள் பைக்குகளுக்கான விதிமுறைக்கு உட்பட்டு, இந்த இன்ஜின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் லிட்டருக்கு 73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அடைவதில் ஹீரோவின் i3s ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உதவுகிறது.
வடிவமைப்பு விவரங்கள்:
இந்த பைக்கை மற்ற லைன் - அப்பிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது ஸ்டெல்தி ட்யூயல் டோன் வண்ணப்பூச்சு ஆகும். கூர்ந்து கவனிக்கும் போது, மற்ற Splendor மாடல்களில் காணப்படும் வர்த்தக முத்திரையான சதுர வடிவ இண்டிகேட்டட்ரை விட புதிய இண்டிகேட்டர் வித்தியாசமான வடிவமாக தெரிகிறது. Splendor+ XTEC 2.0 என்பது நம் நாட்டில் மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட அதே எளிமையான, நம்பகமான பைக் ஆகும். XTEC மாடலாக இருப்பதால், இந்த பைக்கில் ப்ளூடூத்-இணக்கமான டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது, அதாவது நீங்கள் பயணிக்கும்போது வரும் செல்ஃபோன் அழைப்பு மற்றும் செய்தி எச்சரிக்கைகளைப் பெறலாம். கூடுதலாக இந்த பைக்கில் USB சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.
நீளமான இருக்கை, கீல் வகை வடிவமைப்புடன் கூடிய பெரிய கையுறை பெட்டி ரைடர்களுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது. இந்த Splendor ஆனது HIPL உடன் LED ஹெட்லைட்களுடன் வருகிறது. நிறுவனம் 5 ஆண்டுகள்/70,000 கிமீ வாரண்டியை வழங்குகிறது. புதிய Splendor+ XTEC ஆனது மேட் கிரே, க்ளோஸ் பிளாக் மற்றும் க்ளோஸ் ரெட் ஆகிய மூன்று டூயல்-டோன் வண்ணங்களில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
ரூ.82,911 விலையில் Hero Splendor+ XTEC 2.0 ஆனது நிலையான XTEC ஐ விட ரூ. 3,000 அதிகம். இந்திய சந்தையில் இந்த பைக்கின் போட்டியாளர்களாக ஹோண்டா ஷைன் 100 (ரூ. 64,900) மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 (ரூ. 67,808) ஆகியவை உள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

