தமிழ்நாடு அரசு வழங்கிய அனுமதி.. பேட்டரி மூலம் இயங்கும் நுயூகோ பேருந்துக்கு கிடைத்த பெருமை..!
பேட்டரி மூலம் இயங்கும் நுயூகோ பேருந்து தமிழ்நாடு அரசால் பதிவு செய்யப்பட்ட முதல் மின்சார போக்குவரத்து பேருந்து என்ற பெருமையை பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் பதிவு செய்த முதல் வாகனம்:
இந்தியாவின் மிக முக்கியமான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் கிரீன்செல் மொபைலிட்டி நிறுவனம். பேட்டரியிலே இயங்கும் வகையில் இவர்கள் தயாரித்துள்ள பேருந்து நுயூகோ (Nuego). தமிழக அரசு பேட்டரியில் இயங்கும் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் போக்குவரத்து துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, பேட்டரியில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்களும் தங்களது போக்குவரத்து தயாரிப்பு வாகனங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில், பேட்டரியிலே இயங்கும் நுயூகோ பேருந்துக்றகு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் பேட்டரி மூலம் இயங்கும் போக்குவரத்து வாகனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. அரசாங்கத்தின் முன்னோக்கு சிந்தனைக் கொள்கைகளின் ஆதரவுடன், போக்குவரத்து துறையில் பசுமையான, நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும், பதிவு செய்யப்பட்ட முதல் பேட்டரி மூலம் இயக்கப்படும் போக்குவரத்து வாகனம் என்பதில் பெருமை கொள்கிறோம்.
எலக்ட்ரிக் பேருந்து:
தமிழ்நாடு அரசு பதிவு அனுமதி வழங்கியதன்மூலம் தமிழ்நாட்டில் தங்களது விற்பனையை அதிகரிக்க கிரீன்செல் மொபைலிட்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நுயூகோ பேருந்து தமிழ்நாட்டில் தற்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கும், திருப்பதியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்தை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது இந்த இ – பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நுயூகோ பேருந்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் போக்குவரத்து சேவையில் எலக்ட்ரானிக் வாகனங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கான முயற்சியில் பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
மேலும் படிக்க: TVS X Electric Scooter: ஸ்போர்ட்ஸ் லுக்கில் டிவிஎஸ் எக்ஸ் மின்சார ஸ்கூட்டர்.. அசத்தலான அவுட் லுக், அச்சுறுத்துகிறதா விலை?
மேலும் படிக்க: Revolt RV400 Electric Bike: இந்தியாவில் மீண்டும் ஒரு லிமிடெட் எடிஷன் பைக்..ரெவோல்ட் ஆர்வி 400 மின்சார பைக் சிறப்பம்சங்கள் இதோ..!