மேலும் அறிய

Flagship Model Cars: கார் நிறுவனங்களின் அடையாளமான ஃபிளாக்‌ஷிப் மாடல்! பல்வேறு நிறுவனங்களின் டாப் மாடல் எவை?

Flagship Model Cars List: இந்திய கார் சந்தையில் ஒவ்வொரு நிறுவனத்தின் முதன்மையான அதாவது, ஃபிளாக்‌ஷிப் கார் மாடல் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Flagship Car: இந்திய கார் சந்தையில் ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தின் முதன்மையான அதாவது ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்திய கார் சந்தை:

இந்தியாவில் கார் சந்தை என்பது தொடர்ந்து அபார வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. பணக்காரர்களுக்கான வாகனம் என்ற பிம்பம் உடைந்து, நடுத்தர குடும்பத்தினரிடையே காரின் பயன்பாடு அதிகரித்ததே இதற்கு காரணமாகும்.  வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும், தொடர்ந்து புதுப்புது கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அதேநேரம், ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் தங்களது அடையாளமாக, வடிவமைப்பு, செயல்திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் பிளாக்‌ஷிப் எனப்படும் முதன்மையான வாகனத்தை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் உள்ள முக்கிய கார் உற்பத்தியாளர்களின், முதன்மையான கார் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டொயோட்டா - லேண்ட் க்ரூசர்:

நாட்டின் மிகச்சிறந்த எஸ்யுவி கார்களுக்கு புகழ்பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் மாடலாக லேண்ட் க்ரூசர் உள்ளது. இதில் உள்ள  3346 cc இன்ஜின் ஆனது, 304.41 bhp மற்றும் 700 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 5 பேர் அமரும் வகையிலான வசதியை கொண்டுள்ள இந்த காரானது, லிட்டருக்கு 11 km மைலேஜ் வழங்குகிறது. இந்த காரின் விலை இந்திய சந்தையில் 2 கோடியே 10 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா- அக்கார்ட்:

ஹோண்டா நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் கார் மாடலாக இருப்பது அக்கார்ட் ஹைப்ரிட் மாடல். இதில் இடம்பெற்றுஇள்ள 1993 cc - 3471 cc என இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 143.016bhp & 175 Nm மற்றும் -271.3 bhp &  339 Nm ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த வாகனம், லிட்டருக்கு 10.7 - 23.1 kmpl மைலேஜ் வழங்குகிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ள இந்த வாகனம், இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவற்றின் விலை முறையே 38 லட்சம் மற்றும் 43.21 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா - அல்டூரஸ் G4:

எஸ்யுவி வாகனங்களுக்கு பெயர் போன மஹிந்திரா நிறுவனத்தின், பிளாக்‌ஷிப் மாடலாக அல்டூரஸ் G4 உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 2157 cc இன்ஜின் ஆனது, 178.49 bhp மற்றும் 420 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 7 பேர் அமரும் வகையிலான இடவசதியை கொண்டுள்ள இந்த காரானது, ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை 27 லட்சத்து 70 ஆயிரம் தொடங்கி, அதிகபட்சமாக 31 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹுண்டாய் - IONIQ 5 Car:

மிட் - எஸ்யுவி செக்மெண்டில் அசத்தி வரும் ஹுண்டாய் நிறுவனத்தின் தற்போதைய பிளாக்‌ஷிப் மாடலாக இருப்பது IONIQ 5 கார். மின்சார கார் மாடலான இதில் 72.6 kWh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 631 km மைலேஜ் வழங்குகிறது. 5 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்டுள்ள இந்த காரின் விலை, இந்திய சந்தையில் 45 லட்சத்து 95 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா - சஃபாரி:

நம்பகத்தன்மைக்கு பெயர் போன டாடா நிறுவனத்தில், சஃபாரி கார் அதன் பிளாக்‌ஷிப் மாடலாக உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 1956சிசி இன்ஜின் ஆனது 167.62 bhp மற்றும் 350 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அதிகபட்சமாக 7 பேர் வரை அமரும் வகையிலான வசதியை கொண்டுள்ள இந்த காரானது, லிட்டருக்கு 16.3 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 5 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை, 16 லட்சத்து 19 ஆயிரமாகவும், அதிகபட்சமாக 27 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சுசுகி - இன்விக்டோ:

மலிவு விலை கார்களுக்கு பெயர்போன மாருதி சுசுகி நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் கார் மாடலாக இருப்பது இன்விக்டோ. இதில் இடம்பெற்றுள்ள 1987 cc இன்ஜின் 150.19 bhp மற்றும் 188 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ள இந்த வாகனத்தில் 8 பேர் வரை ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். 3 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை 25 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகும். அதிகபட்ச விலை 29 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget