Lexus LX 500d: இப்படியும் ஒரு காரா? கோடிகளில் விலை, நிரம்பி வழியும் புக்கிங் - இனி ஆஃப்-ரோட்னா லெக்சஸ் தான்
Lexus LX 500d: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லெக்சஸ் நிறுவனத்தின் LX 500d கார் மாடல் விநியோகம் தொடங்கியுள்ளது.

Lexus LX 500d: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லெக்சஸ் நிறுவனத்தின் LX 500d கார் மாடலின் தொடக்க விலையே ரூ.3 கோடி ஆகும்.
லெக்சஸ் LX 500d கார் விநியோகம் தொடக்கம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லெக்சஸ் நிறுவனத்தின் மிகவும் பிரீமியம் எஸ்யுவி ஆன, LX 500d கார் மாடலின் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்களின் விவரங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, முன்பதிவு முற்றிலுமாக நிரம்பியுள்ளது. LX 500d காரின் தொடக்க விலையே ரூ.3 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றல், வசதி, ஈடு இணையற்ற ஆஃப் ரோட் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு இந்த கார் பிரதான தேர்வாக இருக்கும்.
லெக்சஸ் LX 500d: விலை, வேரியண்ட்கள்
LX 500d கார் மாடலின் அர்பன் வேரியண்டின் தொடக்க விலை (எக்ஸ்-ஷோரூம்) ரூ.3 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓவர்டெயில் வேரியண்டின் விலை ரூ.3.12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்த காருக்கான முன்பதிவு தொடங்கிய முதல்நாளே பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த காரின் விநியோகம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், தேவை நிறைந்த ஆடம்பர கார்களுக்கான அரிய லீகில் Lexus இணைந்துள்ளது. இந்த காரானது இந்திய சந்தையில் ரேஞ்ச் ரோவர், மெர்சிடஸ் பென்ஸ் GLS, BMW XM மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் G-Class ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
Lexus LX 500d doing some minor off-roading😬 pic.twitter.com/qOmCBvRPfO
— MotorOctane (@MotorOctane) March 21, 2024
லெக்சஸ் LX 500d: இன்ஜின், செயல்திறன்
LX 500d காரில் 3.3 லிட்டர் V6 ட்வின் டர்போ டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 304bhp மற்றும் 700Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. மேலும், இதில் இடம்பெற்றுள 10 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆனது, நிலப்பரப்பில் சுமூகமான கியர் மாற்றங்களுக்கு உதவுகிறது. நிலையாக வழங்கப்பட்டுள்ள 4 வீல் ட்ரைவ் ஆனது, சாலையின் எந்தவொரு சூழலிலும் வலுவான இழுவை திறனை உறுதி செய்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் என்பதால், ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பான இயக்கவியலை LX 500d கார் சமநிலைப்படுத்துகிறது. இது லிட்டருக்கு சுமார் 7 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
லெக்சஸ் LX 500d: ஆஃப்-ரோட் திறன்
4 வீல் ட்ரைவ் அம்சம் காரணமாக, மோசமான தரைபரப்புகளில் கூட வலுவான பிடிமானம் மற்றும் கையாளுதல் என்பது எளிதாகியுள்ளது. நகர்ப்புறங்களின் சாலைகளோ அல்லது மலைப்பாதைகளோ LX 500d ஒரே மாதிரியான சுமூகமான பயண அனுபவத்தை வழங்குகிறது. அதிநவீன டிரைவ்டிரெய்ன் மற்றும் அதிக முறுக்குவிசை உற்பத்தி காரணமாக, எந்தவொரு சாலையிலும் பயணிக்கக் கூடிய வாகனமாகவும், அதேநேரம் ஒருபோதும் பிரீமியம் அம்சங்களின் பலனை இழக்காத வாகனமாகவும் LX 500d உள்ளது.
லெக்சஸ் LX 500d: வடிவமைப்பு
LX 500d கம்பீரமான வடிவமைப்பு கொண்டு சாலையில் ஆளுமையை வெளிப்படுத்தும் தோற்றத்தை பெற்றுள்ளது. பலமான கட்டுமஸ்தான அமைப்பு மற்றும் அழகான நெளிவுகள் அடங்கிய கலவையான இதன் டிசைன் உள்ளது. லெக்சஸ் நிறுவனத்தின் சிகேண்ட்சர் கிரில் தொடங்கி எல்இடி லைட்டிங் வரை அனைத்துமே கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. LX 500d காரானது சோனிக் க்வார்ட்ஸ், கிராபைட் பிளாக், பிளாக், சோனிக் டைட்டானியம் மற்றும் மாங்கனீஸ் லஸ்டர் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. குறிப்பாக ஓவர்டெயில் வேரியண்டானது கிரிம்ஸன் ஓவர்டெயில் காக்கி உள்ளிட்ட சில எக்ஸ்க்ளூசிவ் வண்ணங்களிலும் கிடைக்கிறது.
லெக்சஸ் LX 500d: உட்புற அமைப்பு
அட்டகாசமான சக்தியை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான சொகுசு அம்சங்களையும் LX 500d கொண்டுள்ளது. பிரிவின் சிறந்த மெடீரியல்களை கொண்டு உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் நுணுக்கமாக வசதிகளில் எந்தவித குறைபாடும் வந்துவிடக் கூடாது என பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரை ஓட்டுவது மிகச்சிறந்த அனுபவமாக மாற்றுகிறது.
லெக்சஸ் LX 500d: தொழில்நுட்ப அம்சங்கள்
LX 500d கார் மாடலானது நார்மல், எகோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் S மற்றும் ஸ்போர்ட் S+ என ஐந்து ட்ரைவ் மோட்களை கொண்டுள்ளது. அமசங்களை பொறுத்தவரையில், ஃப்ரண்ட் சீட் மசாஜ் ஃபங்சன்ஸ், ஹீடட் & வெண்டிலேடட் ஃப்ரண்ட் & ரியர் சீட்ஸ், 4 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, வயர்ட் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, முன்புற பயணிகளுக்காக இரண்டு 11.6 இன்ச் எண்டர்டெயின்மெண்ட் டிஸ்பிளே, சிங்கிள் பேன் சன்ரூஃப், 25 ஸ்பீக்கர் 3டி மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் LX 500d காரை பிரீமியமாக மாற்றுகின்றன.
லெக்சஸ் LX 500d: பாதுகாப்பு அம்சங்கள்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய,10 ஏர் பேக்குகள், ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ட்ரெய்லர் ஸ்வே கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், ப்ரி-கொலிசன் சிஸ்டம், லேண்ட் டிபார்ட்சர் & ட்ரேஸ் அசிஸ்ட், சேஃப் எக்சிட் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அடாப்டிங் ஹை பீம்ஸ் போன்ற லெவல் 2 ADAS அம்சங்களும் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. இதுபோக LX 500d காரானது ஆக்டிவ் ஹை கண்ட்ரோல், ஸ்டேண்டர்ட் செண்டர் டிஃப்ரென்சியல் லாக் மற்றும் அடாப்டிவ் சஸ்பென்சியன் போன்ற ஆஃப் ரோட் அம்சங்களையும் கொண்டுள்ளது. டாப் ஸ்பெக் ஆன ஓவர்டெயில் வேரியண்டானது முன்புற மற்றும் பின்புற டிஃப்ரென்சியல் லாக் அம்சத்தையும் பெறுகிறது.






















