மேலும் அறிய

Mahindra Upcoming Cars: எங்க திரும்புனாலும் மஹிந்திரா, டெஸ்டிங்கில் மிரட்டும் புதிய SUV-க்கள் - டாடா கதை ஓவரா?

Mahindra Upcoming Cars India: மஹிந்திரா நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள 5 கார் மாடல்களின் புகைப்படங்கள், சோதனையின் போது சிக்கி கவனத்தை ஈர்த்துள்ளன.

Mahindra Upcoming Cars India: மஹிந்திரா நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள 5 கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரோட் டெஸ்டில் மஹிந்திராவின் புதிய கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் எஸ்யுவி பிரிவில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக உள்நாட்டு சந்தைக்கு ஏராளமான புதிய மாடல்களை தயார்படுத்தி வருகிறது.  இதில் தற்போது சந்தையில் உள்ள கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் முற்றிலும் புதிய கார்களின் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன்கள் அடங்கும். பல புதிய எஸ்ய்விகளின் சாலை பரிசோதனைகளை கூட தொடங்கி ஏராளமான புகைப்படங்களும் கசிந்துள்ளன. அவற்றில் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள 5 கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

1. புதிய தலைமுறை மஹிந்திரா பொலேரோ:

புதிய தலைமுறை பொலேரோ கார் மாடலானது அண்மையில் தான் சாலை பரிசோதனையின் போது பொதுமக்களால் காணப்பட்டது. இந்த காரானது லேடர் ஃப்ரேமிலிருந்து விடுபட்டு, புதிய பிளெக்சிபல் ஆர்கிடெக்ட்சர் அடிப்படையிலான மோனோகோக் சேஸிஸை பெற உள்ளது. சோதனியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களானது, புதிய தலைமுறை பொலேரோவானது ஸ்டைலிங்கி ஒட்டுமொத்தமாக திருத்தங்களை பெறும் என்பதை உணர்த்துகின்றன. உதாரணமாக வட்டவடிவ எல்இடி விளக்குகள் போன்றவை இதில் அடங்கும். ஸ்டைலிங்கோடு இந்த அப்டேட்கள் நின்றுவிடாமல், லெவல் 2 ADAS போன்ற உயர்ந்த நிலையிலான பாதுகாப்பு அம்சங்களும் இதில் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினில் எந்தவித மாற்றமும் இன்றி mHawk 75 டீசல் இன்ஜின் அப்படியே தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய தலைமுறை பொலேரோ கார் மாடலின் விலை ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2. மஹிந்திரா XUV 3X0 EV:

XUV 400 கார் மாடலின் வாரிசாக கருதப்படும் XUV 3X0 EV பல முறை சாலை சோதனைகளின் போது காணப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மின்சார கார் போர்ட்ஃபோலியோவில் BE 6 கார் மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டு, டாடாவின் நெக்ஸா மின்சா எடிஷனுக்கு போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மின்சார எடிஷனுக்கான சில திருத்தங்களை தவிர, தோற்றத்தை வைத்து பார்க்கையில் இது இன்ஜின் XUV 3X0 இன்ஜின் அடிப்படையிலான வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. கேபின் மற்றும் அம்சங்கள் அனைத்தும் அப்படியே தொடர்கின்றன. XUV 3X0 EV கார் மாடலானது XUV மாடலில் உள்ள 34.5 KWh மற்றும் 39.4 KWh பேட்டரி பேக்குகளை கொண்டு, முறையே 375 மற்றும் 456 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்காலத்தை மையப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் XUV 3X0 EV கார் மாடலின் விலை ரூ.13 முதல் ரூ.17 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. மஹிந்திரா BE RALL-E

கடந்த 2023ம் ஆண்டு கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட மஹிந்திராவின் BE RALL-E, கட்டுமஸ்தான மற்றும் ஆஃப்-ரோட் அம்சங்களை மையப்படுத்திய BE 6 மின்சார எஸ்யுவின் மற்றொரு வெர்ஷனாகும். அண்மையில் சோதனையில் சிக்கியதை ஒட்டி, அடுத்த சில மாதங்களில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்செப்ட் மாடலில் காட்சிப்படுத்தப்பட்ட பெரும்பாலான வடிவமைப்பு அம்சங்கள் அப்படியே உற்பத்தி நிலையிலும் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. உட்புற கேபின், டேஷ்போர்ட் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை BE 6 கார் மாடலிலிருந்து பகிரப்படலாம். ஆஃப் ரோட் திறமையை பூர்த்தி செய்ய, BE RALL-E காரில் டூயல் மோட்டர் ஆல் வீல் ட்ரைவ் அமைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடக்க விலையே ரூ. 60 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

4. 2026 மஹிந்திரா XUV 700

மஹிந்திரா நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் கார் மாடலான XUV 700-க்கு, அடுத்த ஆண்டு மத்தியில் மிட்-லைஃப் ஃபேஸ்லிப்ஃடை அறிமுகப்படுத்தும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. கடந்த 2021 முதல் விற்பனையில் உள்ள இந்த காரானது, தற்போது வரை டிசைனில் எந்தவொரு அப்டேட்டையும் பெறவில்லை. இந்நிலையில் தான் முதன்முறையாக XUV 700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் புகைப்படங்கள் சாலை பரிசோதனையின் போது அண்மையில் சிக்கியது. மஹிந்திராவின் அண்மைக்கால நடவடிக்கையின்படி, இந்த காரின் பெயர் XUV 7X0 என மாற்றப்படலாம். தார் ராக்ஸ்ஸைப் போலவே, புதிய வட்ட வடிவ LED ஹெட்லேம்ப்களுடன் புதுப்பிக்கப்பட்ட முன்பக்கத்தை பெறும். இன்ஜின் ரீதியாக மாற்றமின்றி அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்ட்  டீசல் இன்ஜின்கள் தொடரும் என கூறப்படுகிறது. தற்போதைய எடிஷனின் எக்ஸ் - ஷோரூம் தொடக்க விலையே ரூ.14.49 லட்சமாக இருப்பதால், புதிய எடிஷனின் விலை ரூ.50 ஆயிரம் வரை உயரலாம்.

5. மஹிந்திரா XEV 7e

XUV 700 காரின் முழு மின்சார எடிஷனான XEV 7e மாடலின் விவரங்கள் கடந்த ஆண்டு கசிந்தது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்போது இது நாட்டின் முதல் 7 சீட்டர்களை கொண்ட முழுமையான மின்சார கார் மாடலாக இருக்கும். XEV 7e காரானது BE 6 மற்றும் XEV 9e போன்ற கார்களை போன்று தீவிரமான ஸ்டைலிங்கைக் கொண்டிருக்காது.  59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக்கைப் பகிர்ந்து கொண்டு, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 650+ கிமீக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கலாம். XEV 7e e-SUV, XUV 7OO-வின் பெரும்பாலான அம்சங்களை தக்க வைத்துக் கொண்டு, உள்நாட்டு சந்தையில் டாடா சஃபாரி மின்சார எடிஷனுடன் நேரடியாக போட்டியிடும். இதன் விலை ரூ.21 முதல் ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
ECI on SIR Form: என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
TVK Vijay: Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
ECI on SIR Form: என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
TVK Vijay: Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
Jan Suraaj Slams NDA: “கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு ‘அது‘ தான் காரணம்“ - NDA-வை குற்றம்சாட்டும் ஜன் சுராஜ்
“கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு ‘அது‘ தான் காரணம்“ - NDA-வை குற்றம்சாட்டும் ஜன் சுராஜ்
KKR Purse 2026:  KKR-ன் அதிரடி முடிவு! ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் நீக்கம் !  ஏலத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
KKR Purse 2026: KKR-ன் அதிரடி முடிவு! ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் நீக்கம் ! ஏலத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
China: யோவ்.. நீ எல்லாம் மனுஷனா.?! ‘பணத்துக்காக சொந்த மகனையே..‘; சீனாவில் அரங்கேறிய கொடூரம்
யோவ்.. நீ எல்லாம் மனுஷனா.?! ‘பணத்துக்காக சொந்த மகனையே..‘; சீனாவில் அரங்கேறிய கொடூரம்
Embed widget