Citroën C5 Aircross SUV: சும்மா நச்சுனு ஒரு கார்! சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்! விலை விவரம் இதுதான்!
Citroën C5 Aircross SUV: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் கார். இது ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட உள்ளது. பேஸ்லிப்ட் செய்யப்பட்ட சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்தியாவில் புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் செப்டம்பர் 8 ஆம் தேதி அதாவது இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த கார் குறித்த டீசர் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டிருந்தது. டீசரில் இந்த கார் அதன் சர்வதேச வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரின் முகப்பு பகுதி இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த மாடல்களில் இருந்து ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் முன்புற பம்ப்பரில் அகலமான ஏர் டேம், மெல்லிய ட்வின் ஸ்லாட் கிரில், புதிய எல்இடி ஹெட்லைட் யூனிட், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
Setting a new benchmark of comfort with a revolutionary new design, experience the #ComfortClassSUV like never before. Presenting the New Citroën C5 Aircross SUV. Iconic Comfort. Revolutionary Design.
— Citroën India (@CitroenIndia) September 8, 2022
Click here to book a test drive: https://t.co/uvFNYTk9lU#C5AircrossSUV pic.twitter.com/i38pwln3W4
புதிய 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் காரின் பக்கவாட்டு மற்றும் காரின் பின்புறங்களில் முன்புறத்தில் செய்யப்பட்டதுபோல் அதிக மாற்றம் செய்யப்படவில்லை. 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளன. இந்த 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் புதிய மாடலானது எக்லிப்ஸ் புளூ நிறத்தில் மார்க்கெட்டில் கிடைக்கும்.
ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் கார் பிளக்-இன்-ஹைப்ரிட் வெர்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்த அளவுக்கு அம்சம் கொண்ட இந்த கார் இந்தியாவிலும் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்த நிலையில், C5 ஏர்கிராஸ் மாடல் C5 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படவுள்ளது. C5 ஏர்கிராஸ் மாடல் காரின் என்ஜின் 177 ஹெச்பி பவர் கொண்ட காராக இருக்கிறது. இந்த காரின் என்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்களைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆட்டோமேடிக் டிரைவிங் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Combining intuitive new technology with a revolutionary new design, set a new benchmark of comfort and luxury in the #ComfortClassSUV. Presenting the New Citroën C5 Aircross SUV, starting at Rs 36.67 Lakh*#C5AircrossSUV pic.twitter.com/4vd6HrfVxl
— Citroën India (@CitroenIndia) September 8, 2022
மேலும், இந்த காரானது இந்திய சந்தை மதிப்பில் 36 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இது மற்ற SUV கார்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.