Citroen Basalt: அடிச்சு நொறுக்கலாமே..! பாதுகாப்பு பரிசோதனையில் ஸ்டார்களை அள்ளிய சிட்ரோயன் பசால்ட்
Citroen Basalt Crash Test: சிட்ரோயன் பசால்ட் கார் மாடலின் பாதுகாப்பு பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
Citroen Basalt Crash Test: சிட்ரோயன் பசால்ட் கூபே எஸ்யுவி ஆனது, 6 ஏர் பேக்குகளை பெற்றுள்ளது.
சிட்ரோயன் பசால்ட்:
சிட்ரோயனின் புதிய Basalt coupe SUV ஆனது BNCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகளின் சமீபத்திய சுற்றில் நான்கு நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது. இதுவரை BNCAP இன் ஹாரியர் போன்ற டாடா கார்களின் கிராஷ் டெஸ்ட் முடிவுகளை மட்டுமே பார்த்து வந்தோம். இந்நிலையில் இந்தியாவில் பாதுகாப்பிற்கான பரிசோதனையில் நான்கு நட்சத்திரங்களைப் பெறுவது சிட்ரோயனின் சிறந்த நிலையாகும். மேலும், விபத்து சோதனை முடிவுக்கான சான்றிதழைப் பெற்ற முதல் டாடா அல்லாத கார் என்ற பெருமையையும் சிட்ரோயன் பசால்ட் பெற்றுள்ளது.
பாதுகாப்பு பரிசோதனை புள்ளிகள்?
பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்டில், பாசால்ட் 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெறுவது என்பது, வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் என இரண்டு தரப்பு பாதுகாப்பிற்கானது ஆகும். வயது வந்தோருக்கான பாதுகாப்பு புள்ளிகள் 26.19/32 ஆகவும், குழந்தை குடியிருப்பாளர் பாதுகாப்பு புள்ளிகள் 35.90/49 ஆகவும் உள்ளது. ஃப்ரண்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்டில், எஸ்யூவி 16க்கு 10.19 புள்ளிகளைப் பெற்றது, சைட் மூவபிள் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்டில் 16க்கு 16 புள்ளிகளைப் பெற்றது. 1.2லி டர்போ பெட்ரோல் இன்ஜின் எடிஷன் காரானது இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்டது. முன்னதாக, மற்ற கிராஷ் சோதனைகளில் C3 மற்றும் eC3 பூஜ்ஜிய புள்ளிகளை பெற்ற நிலையில், தற்போது ஒரு பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
சமீபத்தில் ரூ.7.99 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட பசால்ட் ஆறு ஏர்பேக்குகளுடன் வருகிறது. இது பல சப் காம்பாக்ட் எஸ்யூவிகள் உட்பட பல எஸ்யூவிக்களுடன் போட்டியிடுகிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே பிளஸ் க்ளைமேட் கண்ட்ரோல் கொண்ட 10.2 இன்ச் தொடுதிரை, ரியர் வியூ கேமரா, ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட், ரியர் ஏசி வென்ட்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் Basalt வருகிறது. பசால்ட் ஒரு புதிய அம்சமான தை (Thigh) சப்போர்ட் அட்ஜெஸ்ட்மெண்ட் ஆப்ஷனையும் பெறுகிறது. பாதுகாப்பை உறுதி செய்ய 6 ஏர்பேக்குகள், ESC, Isofix ஆங்கர்கள் மற்றும் சீட் பெல்ட் நினைவூட்டல்களை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டேண்டர்டாக பெறுகிறது.
இன்ஜின் விவரங்கள்:
பசால்ட் ஒரு நிலையான 1.2லி பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது நேட்சுரல் ஆஸ்பிரேடட் யூனிட் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது. மேலும் வேகமான டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது, இது ஸ்டேண்டர்டாக மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உடன் வருகிறது. NA லிட்டருக்கு18கிமீ மைலேஜ் வழங்குகிறது. அதேநேரம், டர்போ-பெட்ரோல் மேனுவல் லிட்டருக்கு 19.5கிமீ மற்றும் டர்போ-பெட்ரோல் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 18.7கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு அம்சத்தில் 4 நட்சத்திரங்களை பெற்றுள்ள பாசால்ட் ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. விரைவில் மற்ற கிராஷ் டெஸ்ட் முடிவுகளை BNCAP இலிருந்து அறிந்து கொள்ளலாம்.