மேலும் அறிய

BMW, Mini 2024: பக்கா பிளான்..! பிஎம்டபள்யூ, மினி நிறுவனங்கள் 2024ல் இந்தியாவில் களமிறக்க உள்ள கார்களின் பட்டியல் இதோ..!

BMW, Mini car launch 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2024ம் ஆண்டில் பிஎம்டபள்யூ மற்றும் மினி நிறுவனம் சார்பில், வெளியாக உள்ள கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

BMW, Mini car launch 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2024ம் ஆண்டில் பிஎம்டபள்யூ மற்றும் மினி ஆகிய நிறுவனங்கள், தலா இரண்டு புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் சந்தை 2024:

2023 ஆண்டில் BMW நிறுவனமானது  X1 மற்றும் 7 சீரிஸ் போன்ற புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தியதோடு,  X5 மற்றும் X7 SUVகளுக்கான மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் இந்திய சந்தைக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு அதன் மிக முக்கியமான புதிய மாடல்களில் ஒன்றான 5 சீரிஸின் புதிய தலைமுறை காரானது அதன் மின்சார வேரியண்டுடன் அறிமுகப்படுத்த உள்ளது. இதனிடயே, நடப்பாண்டு மினி நிறுவனம் இந்தியாவில் ஒப்பீட்டளவில் அமைதியான ஆண்டைக் கொண்டிருந்தாலும், வரும் ஆண்டில் இந்த பிராண்ட் கூப்பர் மற்றும் கன்ட்ரிமேன் ஆகிய இரண்டு கார்களையும் புதிய ஜென் மாடல்கள் உடன் மேம்படுத்த உள்ளன.

BMW 5 Series:

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.70 லட்சம்-80 லட்சம்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 இன் பிற்பகுதியில்

5 சீரிஸின் புதிய தலைமுறை அதன் முந்தைய மாடலை விட பெரியதாகவும், வசதியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 7 சீரிஸைப் போலவே 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 14.9-இன்ச் டச்ஸ்கிரீன் ஆகியவை iDrive 8.5 சிஸ்டத்தில் அமைந்துள்ளன.  வெளிநாட்டில் முழு வீகன் இன்டீரியர் விருப்பத்தை வழங்கும் முதல் BMW இதுவாகும். இந்த புதிய 5 சீரிஸ் வரிசையில் 2.0 லிட்டர் பெட்ரோல், டீசல் இன்ஜின்கள் மட்டுமே இந்தியாவிற்கு வரும் என கருதப்படுகிறது. 

BMW i5:

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 90 லட்சம்-1 கோடி
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 இன் பிற்பகுதியில்

புதிய 5 சீரிஸ் காரானது i5 எனப்படும் மின்சார பதிப்பையும் தன்னுடன் சந்தைக்கு கொண்டு வருகிறது. இது  வெளிநாடுகளில் M60 xDrive மற்றும் eDrive40 ஆகிய இரண்டு பதிப்புகளில் கிடைக்கிறது, இவை இரண்டும் 81.2kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. M60 ஒரு ஸ்போர்ட்டியர் ட்வின்-மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் பதிப்பாகும். இது 601hp மற்றும் 820Nm டார்க்கை உருவாக்குவதோடு,  வெறும் 3.8 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை அடைகிறது. அதிகபட்சமாக மணிக்கு 230 வேகத்தில் இந்த காரை செலுத்த முடியும். eDrive40 மாடலானது பின்புற சக்கரங்களை இயக்கும் ஒற்றை மோட்டார் கொண்டுள்ளது. இது 340hp மற்றும் 430Nm உற்பத்தி செய்கிறது. 0-100kph நேரம் 6 வினாடிகளில் எட்டும். இரட்டை மோட்டருக்கு 516 கிமீ மற்றும் ஒற்றை மோட்டார் பதிப்பிற்கு 582 கிமீ வரம்பை கொண்டிருக்கிறது. இது உட்புறத்தில் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 14.9-இன்ச் தொடுதிரை  அமைப்பை கொண்டுள்ளது. அதேநேரம்,  i5 இன் எந்த பதிப்பு இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது என்பது இதுவரை உறுதியாகவில்லை.

Mini Cooper SE:

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 58 லட்சம்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 இன் தொடக்கத்தில்

புதிய மூன்று கதவு மின்சார ஹேட்ச்பேக்கானது பெஸ்போக் EV இயங்குதளத்தில் அமர்ந்திருக்கிறது. இது மினியின் டிசைன் தீம்களை சார்ந்த வட்ட வடிவ ஹெட்லைட்கள், ஒரு புதிய, பெரிய எண்கோண முன் கிரில் மற்றும் பிளாங்க்ட்-அவுட் சர்பேஸில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கோண டெயில்-லைட்களைக் கொண்டுள்ளது. மேலும் வீல்பேஸ் பேட்டரிக்கு இடமளிக்க நீண்டதாக இருந்தாலும், அதன் ஒட்டுமொத்த நீளம் குறைந்துள்ளது. அதன் உட்புற வடிவமைப்பில் இன்னும் ரெட்ரோ-கூல் தீம் எதிரொலிக்கிறது. முக்கிய அம்சமாக வட்டமான 9.4-இன்ச் OLED இன்ஃபோடெயின்மென்ட் திரை சாம்சங் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படை கூப்பர் E ஆனது 184hp, 290Nm முன் பொருத்தப்பட்ட மோட்டார் மற்றும் 40.7kWh பேட்டரி உடன்305km என்ற வரம்பைக் கொண்டுள்ளது. கூப்பர் SE ஆனது 6.7 வினாடிகளில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுகிறது. நேரத்துடன் 218hp மற்றும் 330Nm ஐ உற்பத்தி செய்கிறது. 54.2kWh பேட்டரி பேக்கில் 402km வரம்பை வழங்குகிறது.

Mini Countryman:

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 50 லட்சம்-65 லட்சம்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 நடுப்பகுதியில்

மினியின் ஐந்து-கதவு கிராஸ்ஓவர் அதன் மூன்றாம் தலைமுறை அவதாரத்தில் இந்தியாவிற்கு வருகிறது . புதிய காரின் அளவு வளர்ந்ததன் விளைவாக, கேபின் இடமும் விரிவடைந்துள்ளது. பின்புறத்தில் கூடுதல் 130 மிமீ லெக்ரூம் உள்ளது.  லெவல் 2 ADASஐ வழங்கும் முதல் மினியாக கன்ட்ரிமேன் இருக்கும். சர்வதேச சந்தைகளில், கன்ட்ரிமேன் மின்சாரம், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெயின்களைப் பெறுகிறது. 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.