Top EVs of 2023: இந்திய சந்தையில் 2023-ஆம் ஆண்டில் அறிமுகமான சிறந்த மின்சார கார்கள் - டாப்-6 லிஸ்ட் இதோ
Top EVs of 2023: நடப்பாண்டில் இந்திய சந்தையில் அறிமுகமாகி விற்பனையில் அசத்திய சிறந்த மின்சார கார்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Top EVs of 2023: நடப்பாண்டில் இந்திய சந்தையில் அறிமுகமாகி விற்பனையில் அசத்திய சிறந்த மின்சார கார்களின் பட்டியலில் ஹுண்டாய் ஐயோனிக் 5 முதலிடம் பிடித்துள்ளது.
மின்சார வாகனங்கள் 2023:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. விற்பனை மற்றும் புதியதாக வழங்கப்பட்ட கூடுதல் ஆப்ஷன்களின் அடிப்படையிலும் வாடிக்கையாளர் மத்தியில் குறிப்பிடத்தகுந்த பாய்ச்சலை கண்டுள்ளது. சந்தையில் ஒரு சில ஆப்ஷன்களே உள்ளன என்ற சூழலில் இருந்து, மின்சார வாகனங்களின் பிரிவானது சந்தை அளவின் அடிப்படையில், கச்சிதமான மற்றும் சொகுசு மாடல்களிலும் அதிக விருப்பங்களை தற்போது கொண்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்ற, மின்சார வாகனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Hyundai Ioniq 5:
Ioniq 5 மாடலின் தீவிரமான ஸ்டைலிங் தீம், எதிர்காலத் தோற்றம் மற்றும் ஸ்டேண்டர்ட் உபகரணங்களை பயன்படுத்தும் உட்புறம் ஆகியவற்றிற்காக தனித்து நிற்கிறது. பேஸ்போக் எலக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் அதிக இடத்தைக் கொண்டுவருகிறது, அதே நேரத்தில் மாடுலர் கேபினின் செயல்பாடும் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, Ioniq 5 ஆனது 217hp மற்றும் 350Nm ஆற்றலை உருவாக்கும் ஒற்றை மோட்டார் பதிப்பில் அதிகப்படியான விலையுடன் வருகிறது. 631 கிமீ தூரம் கொண்ட ARAI வரம்பானது பல விலையுயர்ந்த மின்சார வாகனத்தை விட அதிகமாகும்.
MG Comet:
இந்த சிறிய கோமெட் மாடலானது தனது மலிவு விலை காரணமாக, அதிகப்படியான வாடிக்கையாளர்களை மின்சார வாகன பயன்பாட்டிற்கு இழுக்க மிகப்பெரிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. சிறிய அளவாக இருந்தாலும், உட்புறத்தில் நல்ல அளவு இடவசதியுடன், பிரீமியம் தரமான வசதிகளுடன் தனித்துவமானதாக உள்ளது. இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது. அலவில் சிறியதாக இருப்பதால் அதனை பார்க் செய்வதும், நெரிசலான நகரங்களில் கூட பயணிப்பதும் எளிதானதாக இருக்கும்.
Mercedes-Benz EQE:
EQE ஒரு முறையான ஆடம்பர மெர்சிடிஸ். ஆனாலும் EV ஸ்பெக்ட்ரத்தை உள்ளடக்கி பிராண்டின் பலத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது Mercedes இலிருந்து EQ பிராண்டுடன் இணைக்கப்பட்ட மின்சார வாகனத்தின் குறிப்பிட்ட ஸ்டைலிங் தீமுடன் வருகிறது. அதே நேரத்தில் உட்புறத்தில் உள்ள இடவசதி பெரிய சொகுசு கார்களை பிரதிபலிக்கிறது. இது 550 கிமீ வரம்பை வழங்குவதோடு, அதே நேரத்தில் பெரிய ஹைப்பர் ஸ்கிரீன் முழு டேஷ்போர்டையும் ஆக்கிரமித்து இருப்பதும் பயனாளர்களை கவர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, மெர்சிடிஸ் தனது அவதாரத்தில் EQE ஐக் கொண்டு வந்துள்ளது.
BMW i7:
i7 என்பது அந்நிறுவனத்தின் 7 சீரிஸ் ஆகும். ஆனால் இது மின்சார வாகனம் என்ற முறையில் பிஎம்டபள்யூ நிறுவனத்தின் முதன்மையான மாடலாக உள்ளது. பிரமாண்டமான கிரில்லைக் கொண்ட ஸ்டைலிங் பயனாளர்களை பிரமிக்க வைக்கும். i7 ஆனது 625 கிமீ தூரம் செல்லும் வரம்பை கொண்டுள்ளதுடன், பின்புறத்தில் பெரிய 31.3 இன்ச் டிவியும் உள்ளது!
Lotus Eletre:
இந்தியாவில் கிடைக்கும் அதிவேக மின்சார கார் எலெட்ரே. காரணம் இது 900 குதிரைகளின் சக்தியுடன், மோட்டார் அமைப்பின் செயல்பாட்டை வழங்குகிறது. எலெட்ரேவின் பயண வரம்பு குறைவாக இருந்தாலும், அதிக செயல்திறன் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கிறது.