Bajaj Pulsar N150: களத்தில் குதித்த பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் N150 மாடல்.. இதுல புதுசா என்ன இருக்கு தெரியுமா?
பஜாஜ் நிறுவனத்தின் மூன்றாவது 150சிசி பல்சர் மாடலாக புதிய, பல்சர் N150 மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் N150 மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்சர்:
இந்தியாவை சேர்ந்த மல்டி நேஷனல் ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோரிக்ஷா போன்ற பல்வேறு வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. நீண்ட காலமாக செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்திற்கே புதிய அடையாளத்தை பெற்றுத் தந்த பெருமை, பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிளையே சேரும். அதன் ஸ்போர்ட்டி லுக் இளைஞர்கள் இடையே ஏற்படுத்திய தாக்கம், விற்பனையையும் பல மடங்கு உயர்த்தியது. இதன் காரணமாக பல்வேறு வேரியண்ட்களில் இந்த மாடல் பைக்குகள் இந்திய சந்தையில் அற்முகப்படுத்தப்பட்டன.
பல்சர் N150 மாடல்
அந்த வகையில், 150சிசி திறன் கொண்ட இன்ஜின் வரிசையில்P150 மற்றும் பல்சர் 150 எனும் இரண்டு மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அவற்றின் வரிசையில் புதியதாக பல்சர் N150 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, P150 பல்சரின் பிளாட்ஃபார்மில், N160 பல்சரின் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான பல்சர் N160 பஜாஜ் நிறுவனத்திற்கு வெற்றியாக உள்ளது, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்ப பெற்றதுடன், 2022 ஆம் ஆண்டில் பைக் ஆஃப் தி இயர் உட்பட பல விருதுகளை வென்றுள்ளது. அதேநேரம், P150 மாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதையடுத்து தான், 150 பிளாட்ஃபார்ம் வாகனங்களை வாங்குபவர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில், பஜாஜ் ஒரு புதிய மோட்டார்சைக்கிளுடன் வந்துள்ளதாகத் தெரிகிறது. P150 பல்சரின் பிளாட்ஃபார்மில், N160 பல்சரின் டிசைனில் புதிய பல்சர் N150 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஜின் & விலை விவரம்:
புதிய பல்சர் மோட்டார்சைக்கிளில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் உள்ளது. இந்த இன்ஜின் 14.5 ஹெச்.பி. பவர் மற்றும் 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை இந்திய சந்தையில், 1 லட்சத்து 17 ஆயிரத்து 134 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பஜாஜ் பல்சர் N150 P150 மாடல்களை விட சுமார் ரூ. 5,000- ரூ. 7,000 வரை அதிகமாகும். பஜாஜ் பல்சர் N150 மாடல் ரேசிங் ரெட், எபோனி பிளாக் மற்றும் மெட்டாலிக் பியல் வைட் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V, சுசுகி ஜிக்சர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R போன்ற மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இதர அம்சங்கள்:
இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260mm டிஸ்க், பின்புறம் 130mm டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இதில் எல்.ஈ.டி. ப்ரோஜெக்டர், இரண்டு எல்.ஈ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்.சி.டி. செட்டப் வழங்கப்பட்டுள்ளது.