Bajaj Dominar 400: ரூ.37,000 விலையை குறைத்த பஜாஜ்.. அப்க்ரேடட் டாமினர் 400 வந்தாச்சு - முழு விவரம், அப்டேட்கள் என்ன?
Bajaj Dominar 400: இந்திய சந்தையில் பல்சர் மற்றும் கேடிஎம் 390 ட்யூக் மாடலுக்கு போட்டியாக டாமினர் 400 மோட்டார் சைக்கிள் மாடலை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Bajaj Dominar 400: பஜாஜ் நிறுவனம் 350சிசி இன்ஜின் கொண்ட தனது புதிய டாமினர் 400 மாடலின் விலையை 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது.
பஜாஜ் டாமினர் 400 பைக் வந்தாச்சு
பஜாஜ் நிறுவனம் அண்மையில் தனது ட்ரையம்ப் மோட்டர் சைக்கிள் மாடல்கள் முழுவதையும், 349சிசி இன்ஜினுக்கு மாற்றி மறுஅறிமுகம் செய்தது. இதன் மூலம் முன்பு இருந்த 40 சதவிகிதம் வரி என்ற அடுக்கிலிருந்து தற்போது 18 சதவிகித வரி அடுக்கிற்கு மாறியுள்ளது. அதே பாணியில் தற்போது டாமினர் 400 மாடலும் மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முன்பு இருந்ததை காட்டிலும் 37 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த விலையில், வெறும் 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கே புதிய மோட்டார் சைக்கிள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
பஜாஜ் டாமினர் 400 - புதுசா என்ன இருக்கு?
இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி, 350சிசி கொள்ளளவை தாண்டிய முந்தைய இன்ஜினின் போரை மாற்றாமல், ஸ்ட்ரோக்கை குறைப்பதன் மூலம் சிறிய 349சிசி மோட்டாரை பஜாஜ் உருவாக்கியுள்ளது. ட்ரையம்பை பொறுத்தவரையில் இத்தகைய மாற்றத்தால், உச்சபட்ச ஆற்றல் உற்பத்தியில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இழுவை திறன் என்பது மிகப்பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. அதேநேரம், டாமினரை பொறுத்தவரையில் உச்சபட்ச சக்தி அப்படியே இருக்க, இழுவை திறன் குறைந்துள்ளது.

பஜாஜ் டாமினர் 400 - புதிய இன்ஜினின் திறன்
சிறியதாக்கப்பட்ட 349சிசி சிங்கிள் சிலிண்டரானது லிக்விட் கூல்ட் எடிஷனில் 40.62hp மற்றும் 33.2Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. இதன் மூலம் 1.8Nm அளவிலான இழுவை திறனை டாமினர் 400 இழந்துள்ளது. திருத்தத்திற்கு முந்தைய பழைய டாமினர் 400 மாடலானது, கேடிஎம் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 40hp மற்றும் 35Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 373சிசி இன்ஜினை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றத்தால் டாமினர் 400 ஆனது 3 கிலோ எடையையும் இழந்து 190 கிலோ மொத்த எடையை கொண்டுள்ளது.
பஜாஜ் டாமினர் 400 - மற்ற அப்டேட்கள் என்ன?
ட்ரையம்பை போன்றே இன்ஜின் அளவு குறைக்கப்பட்டு இருந்தாலும், பெயரில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. இன்ஜின் அப்டேட்டை தவிர்த்து புதிய மாடலானது வெளியே செல்லும் பழைய மாடலை அப்படியே பிரதிபலிக்கிறது. பச்சை மற்றும் கருப்பு என்ற இரண்டு வண்ண ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கின்றன. இதுபோக வசதிகள் மற்றும் டூரிங் அடிப்படையிலான அக்செசரிஸ்களும் டாமினர் 400 மாடலில் அப்படியே தொடர்கின்றன.
பழைய மாடல் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய எடிஷனானது 37 ஆயிரம் ரூபாய் அளவிற்கு விலை குறைக்கப்பட்டு 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வரம்பால் டாமினர் 400 மாடலானது டாமினர் 250 மாடலை காட்டிலும் 26 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாகும். இதே வரிசையில் NS400Z மாடலையும் பஜாஜ் இத்தகைய மாற்றத்திற்கு உட்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் சந்தையில் பஜாஜ் டாமினர் 400 மாடலானது, ட்ரையம்ப் ஸ்பீட் 400, கேடிஎம் 390 ட்யூக் மற்றும் பஜாஜ் பல்சர் NS400Z ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















