மேலும் அறிய

Scooters Price: பஜாஜ் தொடங்கி டிவிஎஸ் வரை: கிடுகிடுவென உயர்ந்த மின்சார ஸ்கூட்டர்களின் விலை - காரணம் என்ன?

EV Scooters Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர் மாடல்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

Scooters Price: அதிகபட்சமாக ஏதர் 450எஸ் ஸ்கூட்டரின் விலை, 16 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டர்களின் விலை உயர்வு:

இந்தியாவில் புதிய EMPS எனப்படும் திட்டம் (Electric Mobility Promotion Scheme) ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம்  மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதன்படி, சுமார் 3.33 லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு தலா 10,000 ரூபாயும்,  41 ஆயிரம் சிறிய மூன்று சக்கர வாகனங்களுக்கு 25,000 ரூபாயும், பெரிய மூன்று சக்கர வாகனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும். நான்கு மாதங்கள் அமலில் இருக்கும் இத்திட்டத்திற்காக மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து பெரும்பாலான மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள்,  தங்கள் தயாரிப்புகளின் விலைகளை திருத்தி அறிவித்துள்ளனர். 

புதிய விலை நிலவரம்:

விலை ஒப்பீடு
மாடல்கள் பழைய விலை புதிய விலை வித்தியாசம்
Ather 450S Rs 1.10 lakh Rs 1.26 lakh Rs 16,000
Ather 450X 2.9kWh ரூ. 1.38 lakh ரூ. 1.41 lakh ரூ. 3,000
Ather 450X 3.7kWh ரூ. 1.45 lakh ரூ. 1.55 lakh ரூ. 10,000
Bajaj Chetak Urbane ரூ. 1.15 lakh ரூ. 1.23 lakh ரூ. 8,000
Bajaj Chetak Premium ரூ. 1.35 lakh ரூ. 1.47 lakh ரூ. 12,000
TVS iQube ரூ. 1.34 lakh ரூ. 1.37 lakh ரூ. 3,000
TVS iQube S ரூ. 1.40 lakh ரூ. 1.46 lakh ரூ. 6,000
Vida V1 Plus ரூ.1.15 lakh ரூ. 1.20 lakh ரூ. 5,000
Vida V1 Pro ரூ. 1.46 lakh ரூ. 1.50 lakh ரூ. 4,000

ஏதர் நிறுவன விலை உயர்வு:

ஏதரின் ஸ்போர்ட்டி 450 ரேஞ்ச் விலை 16,000 ரூபாய் வரை விலை உயர்வை கண்டுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் பட்டியலில், இந்த ஸ்கூட்டர் தான் முதலிடத்தில் இருந்த நிலையில் அதிகபட்ச விலை உயர்வை பெற்றுள்ளது.  . 450X இன் 2.9kWh வேரியண்ட் விலையில் ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரிஸ்ட்டா, ஸ்டார்ட்அப் வரிசையில் மிகவும் மலிவு விலையில் உள்ள மின்சார ஸ்கூட்டராக உருவெடுத்துள்ளது.

மேலும் படிக்க: Ather Rizta: ஏதர் ரிஸ்டா மின்சார ஸ்கூட்டர் - அம்சங்கள் என்ன? ரூ.1.10 லட்சத்திற்கு வொர்த்தா?

பஜாஜ் அறிவிப்பு:

பஜாஜின் சேடக் வேரியண்ட்கள் ரூ.12,000 வரை விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அர்பன் முன்பு இருந்ததை விட ரூ. 8,000 அதிகமாகும், அதே சமயம் பிரீமியம் ரூ. 12,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரபலமான TVS iQube வேரியண்ட்களின் விலையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அடிப்படை வேரியண்ட்டின் விலை ரூ. 3,000-மும்,  டாப்-ஸ்பெக் S இன் விலை ரூ.6,000-மும் உயர்த்தப்பட்டுள்ளது. . ஹீரோவின் EV துணை நிறுவனமான விடா, தனது: V1 பிளஸ் விலையை ரூ. 5,000-மும்,  V1 ப்ரோ விலையை ரூ. 4,000-மும் உயர்த்தியுள்ளது.

சுவாரஸ்யமாக, ஓலா தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தவில்லை.  தற்போதைய விலையையே ஏப்ரல் 15 வரை நீட்டித்துள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்  வரும் மாதங்களில் பங்குச்சந்தகள் மூலம்  நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே ஓலா நிறுவனம் அதன் விலை திருத்த நடவடிக்கையை ஒத்திவைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு
small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு
Embed widget