Affordable Bikes Under Rs.1 Lakh: ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள்ள நல்ல மைலேஜோட பைக் வாங்கணுமா.? அப்போ இந்த பட்டியல பாருங்க
நீங்கள், 1 லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு நல்ல பைக்கைத் தேடுகிறீர்கள் என்றால், அதற்கு எந்த பைக் சிறந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

நாம் அன்றாடம் வேலைக்குச் சென்று வருவதற்கும், தினசரி பயணங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய பைக்கைத் தேடுகிறோம். எனவே, மக்கள் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகளை வாங்க விரும்புகிறார்கள். மேலும், விலை 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், மோட்டார் சைக்கிள் வாங்குவது இன்னும் எளிதாகிறது. தினசரி பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் 1 லட்சத்திற்கும் குறைவான பைக்குகள் எவை என்பதை இப்போது ஆராய்வோம்.
TVS Raider 125
டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விலை 80,500 ரூபாய் முதல் 95,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. இது 7 வகைகளில் கிடைக்கிறது. மேலும், இது டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 99-க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. அதோடு முக்கியமாக, ஒரு லிட்டருக்கு 56.7 கிலோ மீட்டர் எரிபொருள் செயல்திறனைக்(மைலேஜ்) கொண்டுள்ளது.
TVS Sport
டிவிஎஸ் ஸ்போர்ட், பிராண்டின் மிகவும் மலிவு விலை மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும். 55,100 ரூபாய் முதல் 57,100 ரூபாய் வரை விலை கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், 109 சிசி எஞ்சின் மற்றும் ஒர லிட்டருக்கு 80 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. அதன் குறைந்த விலை மற்றும் சிறந்த மைலேஜ் காரணமாக, இது பிராண்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக இருக்கிறது.
Hero Xtreme 125R
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஒரு ஸ்டைலான மோட்டார் சைக்கிள். 1 லட்சம் ரூபாய்க்குள் நல்ல தோற்றமுடைய மோட்டார் சைக்கிளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இந்த ஹீரோ பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 91,760 ரூபாயில் தொடங்குகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, சமீபத்தில் இரட்டை சேனல் ABS வேரியண்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வேரியண்டின் விலை 1.04 லட்சம் ரூபாயாகும்.
Hero Splendor Plus
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் தான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள். பல ஆண்டுகளாக, மக்கள் அதன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸின் எக்ஸ்-ஷோரூம் விலை 73,902 ரூயாயில் தொடங்கி, 76,437 ரூபாய் வரை செல்கிறது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது.
Bajaj Pulsar
தினசரி வேலைக்குச் செல்வதற்கு, பஜாஜ் பல்சர் 125 ஒரு நல்ல பைக். இந்த பஜாஜ் மோட்டார் சைக்கிளின் எக்ஸ் -ஷோரூம் விலை 80,004 ரூபாய் முதல் 88,126 ரூபாய் வரை இருக்கும். பல்சர் 125 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 66 கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்று கூறப்படுகிறது.
இந்த பட்டியலில், உங்கள் விருப்பத்திற்கேற்ற பைக்கை தேர்ந்தெடுத்து, ஒரு லட்சம் ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில், ஒரு நல்ல மைலேஜுடன் கூடிய பைக்கை நீங்கள் வாங்கலாம்.





















