Mahindra Thar Facelift: அப்க்ரேட்களை கூட்டி, விலையை குறைத்த மஹிந்த்ரா - பீஸ்ட் ஃபார்மில் புதிய தார் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்
Mahindra Thar Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ராவின் மேம்படுத்தப்பட்ட தார் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல், ரூ.9.99 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Mahindra Thar Facelift: மஹிந்த்ராவின் மேம்படுத்தப்பட்ட தார் ஃபேஸ்லிஃப்ட் காரில், AXT மற்றும் LXT என்ற வேரியண்ட்களில் எது சிறந்தது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட்:
மஹிந்த்ராவின் தார் கார் மாடலுக்கான மிட்லைஃப் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வெளிப்புற தோற்றங்களுடன் சேர்ந்து, ஒரு சில உட்புற மற்றும் அம்ச மேம்பாடுகளையும் இந்த கார் கொண்டுள்ளது. வெளியேறும் தார் போலில்லாமல், அறிமுகத்தின் போது சாஃப்ட் - டாப் விருப்பத்துடன் ஃபேஸ்லிஃப்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வழங்கப்பட்டுள்ள சில புதிய அம்சங்களானது, 5 டோர் தார் ராக்ஸிலிருந்து அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட் - விலை விவரங்கள்
ஃபேஸ்லிஃப்டிற்கு முந்தைய தார் எடிஷனின் விலை 10 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்தது. ஆனால், அதை காட்டிலும் 32 ஆயிரம் ரூபாய் விலையை குறைத்து புதிய எடிஷனின் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டாப் எண்ட் வேரியண்டின் விலை ரூ.16.99 லட்சமாக உள்ளது. இது முந்தைய எடிஷனை காட்டிலும், 38 ஆயிரம் அதிகமாகும்.
| வேரியண்ட்கள் | 1.5 டீசல் | 2.0 பெட்ரோல் | 2.2 டீசல் |
| AXT RWD | ரூ.9.99 லட்சம் | - | - |
| LXT RWD | ரூ.12.99 லட்சம் | - | - |
| LXT RWD AT | - | ரூ.13.99 லட்சம் | - |
| LXT 4WD | - | ரூ.14.69 லட்சம் | ரூ.15.49 லட்சம் |
| LXT 4WD AT | - | ரூ.16.25 லட்சம் | ரூ.16.99 லட்சம் |
மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற மாற்றங்கள்
வெளிப்புற தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின்படி, புதிய எடிஷனானது பாடி வண்ணத்திலாலான க்ரில், டூயல் டோன் முன்புற பம்பர், டேங்கோ ரெட் & பேட்டில்ஷிப் க்ரே என இரண்டு புதிய வண்ண விருப்பங்கள் ஆகிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றபடி, ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ் தொடங்கி, 18 இன்ச் அலாய் வீல்கள் வரை புதிய எடிஷனானது எந்தவித மாற்றமும் இன்றி பழைய எடிஷனை போலவே தொடர்கிறது.
மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற மாற்றங்கள்
வெளிப்புறத்தை காட்டிலும் தார் புதிய எடிஷனின் உட்புறம் அதிக அளவிலான மாற்றங்களை கண்டுள்ளது. அதன்படி, புதிய கருப்பு நிற தீம் கொண்ட டேஷ்போர்ட், புதிய ஸ்டியரிங் வீல், ரியர் ஏசி வெண்ட்கள், டோரில் அமைக்கப்பட்டுள்ள பவர் விண்டோ ஸ்விட்சஸ், ஓட்டுனர் மற்றும் முன்புற இருக்கை பயணிக்கு ஸ்டோரேஜ் அம்சங்களுடன் கூடிய தனித்தனி ஆர்ம்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தில் அமர்ந்தபடி, எரிபொருள் கலனுக்கான மூடியை திறப்பதற்கான பட்டன் ஸ்டியரிங் வீலில் அமைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட் - தொழில்நுட்ப அம்சங்கள்:
பழைய எடிஷன் கூட ஒப்பிடுகையில், புதிய எடிஷனின் பாதுகாப்பு அம்சங்களில் ரியர் வைபர், வாஷர் மற்றும் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளது. கூடுதலாக, மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோட் சூட் உடன் கூடிய, 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது இதுபோக, ESP, ஹில் ஹோல்ட் & டிசென்ட் கண்ட்ரோல், LED டெயில் லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கனெக்டட் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் அம்சங்கள்
தாரின் புதிய எடிஷனில் இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, 152hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 119hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டீசல் மற்றும் 132hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.2 லிட்டர் டீசல் ஆப்ஷன்கள் அதன் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை அப்படியே தொடர்கிறது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிஷனில் 4WD ஆப்ஷனாக வழங்கப்படும் சூழலில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜினில் நிலையான ஆப்ஷனாக வழ்னக்கப்படுகிறது.
AXT Vs LXT - எந்த வேரியண்ட் பெஸ்ட்?
பட்ஜெட்டில் ஆஃப்-ரோட் வாகனத்தை வாங்க விரும்புபவர்கள், தார் LXT RWD டீசலை பரிசீலிக்கலாம். தார் LXT பேஸ் வேரியண்டான AXT-ஐ விட ரூ.3 லட்சம் பிரீமியம் விலையை கொண்டுள்ளது.காரணம் இதில் TPMS, TDMS மற்றும் பின்புறக் காட்சி கேமரா போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உடன், Android Auto மற்றும் Apple CarPlay உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட், ஸ்பீக்கர் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற ஃபீல்-குட் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. மாதாந்திர பயணம் அதிகமாக இல்லாவிட்டால், தார் பெட்ரோல் LXT RWD AT ஐ பரிசீலிக்கலாம். பட்ஜெட் கட்டுப்பாடு இல்லாத வாங்குபவர்களுக்கு, தார் LXT 4WD டீசல் ஆட்டோமேட்டிக் நல்ல தேர்வாக இருக்கும்.




















