Citroen Aircross X: சிட்ரோயன் ஏர்க்ராஸ் X அறிமுகம் - ஏஐ டெக், 360 டிகிரி கேமரா, டர்போ பவர் இன்ஜின் - விலை எப்படி?
Citroen Aircross X: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோயன் நிறுவனம் ஏர்க்ராஸ் X கார் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Citroen Aircross X: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின், ஏர்க்ராஸ் X கார் மாடலின் தொடக்க விலை ரூ.9.77 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிட்ரோயன் ஏர்க்ராஸ் X கார் மாடல்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோயன் நிறுவனம், தனது எக்ஸ் சீரியஸ் ரேஞ்சை புதிய ஏர்க்ராஸ் எக்ஸ் மூலம் விரிவுபடுத்தியுள்ளது. அதன் தொடக்க விலை ரூ.9.77 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், அதன் சிறந்த வீல்பேஸ், 200மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட நடைமுறைத்தன்மை, மேம்பட்ட வசதியுடன் கூடிய சஸ்பென்ஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேபின் வசதியுடன், செக்மெண்ட்டின் முன்னணி இடத்தை கொண்டிருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய 2025 சிட்ரோயன் ஏர்க்ராஸ் எக்ஸ், மிட்-லெவல் வேரியண்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் நேட்சுரலி ஆஸ்பிரேடட் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களை கொண்டிருக்கிறது.
சிட்ரோயன் ஏர்க்ராஸ் X விலை:
| வேரியண்ட் | எக்ஸ்-ஷோரூம் விலை |
| You 1.2L NA பெட்ரோல் MT | ரூ.8,29,000 |
| ப்ளஸ் 1.2L NA பெட்ரோல் MT | ரூ.9,77,000 |
| ப்ளஸ் 1.2L டர்போ பெட்ரோல் MT | ரூ.11,37,000 |
| மேக்ஸ் 1.2L டர்போ பெட்ரோல் MT | ரூ.12,34,500 |
| மேக்ஸ் 1.2L டர்போ பெட்ரோல் AT | ரூ.13,49,100 |
சிட்ரோயன் ஏர்க்ராஸ் X விலை: உட்புற & வெளிப்புற அம்சங்கள்
வெளிப்புறத்தில், புதிய 2025 சிட்ரோயன் ஏர்க்ராஸ் X புதிய டெயில்கேட் பேட்ஜிங் மற்றும் புதிய டீப் ஃபாரஸ்ட் பச்சை வண்ணத்தைக் கொண்டுள்ளது. வழக்கமான மாடலை விட கேபின் அதிக பிரீமியமாகத் தெரிகிறது. பெசல் இல்லாத 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தங்க நிற அலங்காரங்களுடன் கூடிய லெதரெட்-சுற்றப்பட்ட டேஷ்போர்டு மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கியர் லீவர் ஆகியவை இதன் புதிய சிறப்பம்சங்களாக உள்ளன. கூடுதலாக 360 டிகிரி கேமராவையும் கொண்டுள்ளது.
ஏர்க்ராஸ் எக்ஸ், 52 இந்திய மற்றும் உலகளாவிய மொழிகளை ஆதரிக்கும் ப்ராண்டின் புதிய CARA செயற்கை நுண்ணறிவு உதவியாளர் அமைப்பையும் அறிமுகப்படுத்துகிறது. இது வாகன அத்தியாவசிய மற்றும் ரிமோட் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறத. விபத்து எச்சரிக்கைகள், வாய்ஸ் SOS மற்றும் அவசர உதவி மூலம் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது.
சிட்ரோயன் ஏர்க்ராஸ் X - இன்ஜின் விவரங்கள்
இன்ஜின் அடிப்படையில் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, புதிய 2025 சிட்ரோயன் ஏர்க்ராஸ் You வேரியண்ட் 82bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய, 1.2L நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. மிட்-லெவல் X பிளஸ் மற்றும் மேக்ஸ் டிரிம்கள் 110bhp, 1.2L டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகின்றன. டாப்-எண்ட் ஏர்க்ராஸ் X மேக்ஸ் டிரிம் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது.
உள்நாட்டு சந்தையில் இந்த காரானது, ஹூண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகன், ஸ்கோடா குஷாக் மற்றும் டாடா கர்வ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.
சிட்ரோயன் நிறுவனம் பெருமிதம்:
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “புதிய ஏர்க்ராஸ் எக்ஸ் என்பது இந்திய குடும்பங்களின் உண்மையான தேவைகளான இடவசதி, கம்ஃபர்ட், பாதுகாப்பு மற்றும் புத்திசாலித்தனமான புதுமைகளைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட ஒரு SUV ஆகும். CARA அறிமுகத்துடன், நாங்கள் அன்றாட இயக்கத்தை மிகவும் உள்ளுணர்வு மற்றும் தனிப்பட்டதாக மாற்றுகிறோம். புதிய ஏர்க்ராஸ் X ஐ தனித்துவமாக்குவது என்னவென்றால், இது ஒரு குடும்ப SUVயின் நடைமுறைத்தன்மையை எங்கள் X-சீரிஸ் வடிவமைப்பின் பிரீமியம் உணர்வுடன் கலக்கிறது. இது ஒரு பல்துறை SUV ஆகும், இது ஆர்வத்தைத் தூண்டும், ஆனால் அணுகக்கூடியது” என சிட்ரோயன் நிறுவனம் தெரிவித்துள்ளது.





















