வாழ்வில் செல்வம் செழிக்க வேண்டுமா? வாஸ்து முறைப்படி நகைகளை வைக்கும் திசை இதுதான்!
இந்திய வேதமுறைகளில் ஒன்றாகவும் பாரம்பரிய கட்டடக்கலையைக் குறிக்கும் விதமாக, வாஸ்து சாஸ்திரம் விளங்கி வருகிறது. பொதுவாக வாஸ்து என்பதற்கு குடியிருப்பு என்று பொருளாகும்.
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் செழிப்பதற்கு எப்போதும் விலையுயர்ந்த தெற்கு திசையில் வைத்தால் மிகவும் சிறப்பாக அமையும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் வட திசையை நோக்கி பீரோவை வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்திய வேதமுறைகளில் ஒன்றாகவும் பாரம்பரிய கட்டடக்கலையைக் குறிக்கும் விதமாக, வாஸ்து சாஸ்திரம் விளங்கி வருகிறது. பொதுவாக வாஸ்து என்பதற்கு குடியிருப்பு என்று பொருளாகும் என்பதால், வீடு கட்டும் அனைவரும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நமது வீடுகளில் எப்போதும் அமைதி, மகிழ்ச்சி, சுகாதாரம், செல்வம் போன்றவற்றைப் பெற முடிவதாக நம்பப்படுகிறது. எனவே வீடு கட்டுவதற்கு முன்னதாக வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது மட்டுமில்லாமல் எப்போதும் நம் வீடுகளில் சில வாஸ்து முறைகளைப் பின்பற்றுவது என்பது நமக்கு பாசிடிவ் எனர்ஜியைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது. இதோடு மட்டுமின்றி வீடுகளில் சரியான திசையில் பொருள்களை வைக்காவிடில் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
குறிப்பாக விலையுயர்ந்த நகைகளை வாங்குவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அதிகளவில் இருக்கும். ஆனாலும் ஆசைப்பட்டு வாங்கிய நகைகளை அதிக நாள்கள் நம்மால் வீட்டில் வைத்திருக்கும் வாய்ப்பு என்பது அனைவருக்கும் அமையாது. எனவே இன்றைய வாஸ்து சாஸ்திரத்தில், விலைமதிக்கத்தக்க நகைகளை வீட்டில் எந்த திசையில் வைப்பது என இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின்படி, தென் மேற்கு பகுதி குபேர மூலையாகும். எனவே இந்தப்பகுதியில் உள்ள அலமாரியில் அல்லது பீரோவில் பணம், விலைமதிப்புள்ள நகைகளை வைக்கக்கூடிய பீரோக்களை வைக்கலாம். மேலும் இங்கு வைக்கக்கூடிய பீரோ, லாக்கர் போன்ற பொருள்களை வடக்குதிசை நோக்கி வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பண எடை குறைவாக இருப்பதால் வடக்கு திசையில் வைப்பது நல்லது. ஆனால் நகைகளுக்கு அதிக எடை மற்றும் அதிக மதிப்பு உள்ளதால் இதனை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். எனவே நகை போன்ற விலை மதிக்கத்தக்க பொருள்களை தெற்கு திசையில் வைத்திருந்தால் நமக்கு செல்வமும், வாழ்வில் மகிழ்ச்சியும் ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
முன்பே கூறியது போல் வீடுகளில் வைக்கக்கூடிய பீரோ, லாக்கர் போன்ற பொருள்களை வடக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் நம் வாழ்வில் செல்வம் மற்றும் நகைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதோடு மட்டுமின்றி உங்களின் உத்தியோகம் மற்றும் தொழில் சார்ந்த முன்னேற்றத்தை நீங்கள் பெற முடியும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.