(Source: ECI/ABP News/ABP Majha)
Today Rasipalan 1st Oct 2024: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Today Rasipalan: செவ்வாய்கிழமையான இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பான நாள் ஆகும். தொழிலில் வெற்றி கிட்டும். தடைபட்ட திருமண காரியம் கைகூடி வரும். பூர்வீக தோஷங்கள் இருப்பவர்கள் நாளை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும். துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமையும். முன்னேற்றத்திற்கான பணிகள் தொடங்கும். சகோதரர்கள் இடையே இருந்த பிரிவினை முடிவுக்கு வரும். பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு ஏற்ற நாள். கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாகும்.
மிதுனம்:
மினு ராசிக்கார்களுக்கு இந்த நாள் வெற்றிகரமான நாள் ஆகும். தொழிலில் வெற்றி கிட்டும். குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பள்ளி மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கிட்டும். நண்பர்கள் வழியில் கவனம் தேவை. சிவபெருமான் கோயிலுக்கு செல்வது நல்லது ஆகும்.
கடகம்:
கடக ராசிக்கார்களுக்கு இந்த நாள் குழப்பமான நாள் ஆகும். மனக்கவலைகள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது ஆகும். வெளியூர் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது ஆகும். எதிர்பார்த்த காரியம் சில கைகூடும். மூத்தவர்கள் ஆலோசனை கேட்பது நல்லது ஆகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் நாள். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இந்திர வழிபாடு செய்வது நல்லது ஆகும். தொழிலில் முன்னேற்றம் கிட்டும். சுற்றத்தார் மத்தியில் கவனமாக இருக்க வேண்டும். வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சில சில சலசலப்பு குடும்பத்தில் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கவனத்துடன் இருக்க வேண்டும். திடீர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த நாள் செழிப்பான நாள் ஆகும். வியாபாரத்தில் வளர்ச்சி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கிட்டும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சம்பவம் ஒன்று அரங்கேறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கார்களுக்கு இந்த நாள் நினைத்தது நிறைவேறும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு வருவாய் இரட்டிப்பு ஆகும். உடல்நலத்தில் கவனம் தேவை. மனதில் நிம்மதி அதிகரிக்கும். புதியவர்களுடன் கவனத்துடன் பழக வேண்டும். செவ்வாய் கிழமை என்பதால் முருகன் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது ஆகும்.
தனுசு:
தனுசு ராசிக்கார்களுக்கு இந்த நாள் அற்புதமான நாள். காதல் கைகூடும். அலுவலகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். புது தெம்பு கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்கார்களே இந்த நாள் உங்களுக்கு அமைதியான நாள் ஆகும். மனதில் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் தரக்கூடாது. சுற்றத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். மங்கல காரியத்திற்கான தொடக்கம் இன்று அமையும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உற்சாகமான நாள் ஆகும். வாழ்வின் முன்னேற்றத்திற்கான புதிய தொடக்கம் இன்று அமையும். வெளிநாடு வேலைவாய்ப்பு கிடைக்கும். திருமண வாய்ப்பு கைகூடும். பிடித்தவர்களுடனான சந்திப்பு கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.
மீனம்:
மீன ராசிக்கார்களே உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வீட்டில் உள்ளவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. கடன் உதவி கிடைக்கும். கணவன் மனைவியுடன் கருத்து மோதல் ஏற்படும்.