Today Rasipalan : தனுசுக்கு நிம்மதி....! மீனத்துக்கு அமோகம்..! இந்த நாள் உங்களுக்கு எப்படி..?
Today Rasipalan : இன்றைய நாள் எந்த ராசிக்காரருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
அதிகாலை 1.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு யோகமான நாளாக அமையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். குடும்பத்தினருடன் வெளியில் சென்று மகிழ்வீர்கள்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பெருமையான நாளாக அமையும். சுற்றத்தார் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்களது நன்மதிப்பு அதிகரிக்கும். கணவன் மற்றும் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மேன்மையான நாளாக அமையும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொலைபேசி வழியாக நல்ல தகவல் வந்து சேரும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சோதனை மிகுந்த நாளாக அமையும். குடும்பத்தில் சிறு, சிறு சலசலப்பு உண்டாகலாம். அமைதியை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் கொடுக்கல் வாங்கலில் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். சிவபெருமானை வழிபட்டு மன அமைதி காணலாம்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வீண் செலவு ஏற்படும். இன்று வசூலாகும் என்று எதிர்பார்த்த கடன்தொகை வசூல் தாமதம் ஆகலாம். நீண்ட தூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பெரியவர்கள் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். வீண்விவாதம் செய்பவர்களிடம் விலகி இருக்க வேண்டும். தொழில் மற்றும் வேலையில் ஏற்பட்ட குழப்பம் பற்றி சிந்திக்க கூடாது. சிந்தையில் சிவபெருமானை நினைத்தால் நாளைய நாள் ஜெயம் உண்டாகும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் இருந்த பிரச்சினை நீங்கும். நீண்ட நாட்கள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்கள் இடையே இருந்த அன்பு அதிகரிக்கும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். பண விவகாரத்தில் யாருக்கும் இன்று உத்தரவாதம் அளிக்க வேண்டாம். திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகலாம். வேலையில் ஏற்படும் அழுத்தத்தால் பதற்றம் அடையக்கூடாது. துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நிம்மதியான நாளாக அமையும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நடைபெற்று தித்திப்பு வாழ்வில் ஏற்படும். வரன்கள் வாயில் வந்து சேரும். மனதில் புது தன்னம்பிக்கை உண்டாகும்.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு இறைபக்தி அதிகரிக்கும். பெற்றோர்கள்- பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் அருகில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஆலயத்திற்கு சென்று நிம்மதி அடைவீர்கள்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிட்டும். தொழிலில், வேலைவாய்ப்பில் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வெற்றி இன்று கிட்டும். வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாளாக அமையும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் இத்தனை நாள் முயற்சிக்கு பலன் கிடைக்கும். நண்பர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். கூட்டுத் தொழிலில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைத்து மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.