தேனி: ஆடிப்பெருக்கையொட்டி சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்; குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றம்
ஆடிப்பெருக்கையொட்டி புன்னிய ஸ்தலமாகவும் , ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள் , அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை விதிப்பு.
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றுலா தலமாகவும் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் சுருளி அருவி அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் சுற்றுலாப் பயணிகளும், மற்றும் இறைவழிபாடு நடத்தி சுருளி அருவியில் புனிதநீர் எடுத்துச் செல்வதற்காகவும், தங்களது இல்லத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை நடத்திடவும் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தை மாதம் மற்றும் ஆடி மாதம் அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குவிந்தனர்.
பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பூதநாராயணன் கோவிலில், நவதாணியம் வைத்து வழிபாடு நடத்தி அங்குள்ள கோயில்களில் வழிபாடு செய்வது வழக்கம். இந்த நிலையில் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை ஆற்று ஓரங்களில் தங்களது வழிபாடுகளை செய்தனர்.
மேலும் படிக்க: “சங்கீதா இப்படிதான்... எதுவும் தெரியாது” - விஜய் அம்மா சொன்னது என்ன?
சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும் இரவங்கலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவிக்கு அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க முடியாத அளவிற்கு அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை தொடர்ந்து இன்று 2வது நாளாக குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் படிக்க: Gold Rate Today 3,August: குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?
இன்று ஆடிப்பெருக்கு நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்பார்ப்புகளுடன் வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்