மேலும் அறிய
Advertisement
சனீஸ்வர பகவான் அருள்புரியும் ‛தென் திருநள்ளாறு’ !
நாணல்களுடன் தர்ப்பையும் அடர்த்தியாகக் காணப்பட்டதால், முற்காலத்தில் இந்த ஊருக்கு தர்ப்பாரண்யம் என்ற பெயரும் வழங்கி வந்ததாகச் சொல்கிறார்கள்
தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வழியில் வல்லநாடு அருகே அமைந்து உள்ளது நாணல்காடு. ஒருவழிப்பாதை தடத்தில் இருபுறமும் வயக்காட்டின் ஊடே பயணிக்கிறது நாணல்காடு. மஞ்சநெத்தி மரமும் வயகாட்டு வாசனையும் வரவேற்கிறது. சிறிது தூரம் கடந்தவுடன் சாலையின் இடதுபுறம் வரவேற்கிறது
இந்துசமய அறநிலையத்துறையின் அறிவிப்பு பலகை, இத்திருக்கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான என்ற அறிவிப்போடு சாலையில் இருந்து கிழக்கில் செல்லும் ஒத்தையடி பாதையில் சென்றால் கிழக்கு வாசல் மூடிக்கிடக்கிறது. இவ்வழி பழுதடைந்து உள்ளதால் தெக்கு வாசல் வழியாக வரவும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
தெக்கு வாசலில் நுழைந்தவுடன் மொட்டை கோபுரமும் கும்பாபிஷேகம் காணாத கோவில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்வருடங்களுக்கு முன்வரை கோவில் கிழக்கு நோக்கி வாசலில் இருந்து தலவாசல் வரை பெரிய மண்டபம் இருந்ததாகவும் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டது என நினைவு கூறும் கோவில் அர்ச்சகர் சந்திரசேகரன், கோவிலின் மடப்பள்ளி சேதமாகி இன்னும் கொஞ்சம் மழை விழுந்தால் முற்றிலும் விழும் நிலையில் இருப்பதாக கூறும் இவர், இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், தற்போது பிரதோஷ காலம் , பெளர்ணமி காலங்களில் பக்தர்கள் வர ஆரம்பிக்க துவங்கவே அன்னதானத்துக்கு பிரச்சினை இல்லை, நித்திய வருமானம் இல்லாததால் சில நேரங்களில் மின் கட்டணம் செலுத்த கூட வழியில்லாத சூழல் இருப்பதாகவும், அருகில் உள்ள ஆலயங்களில் பூஜை செய்வதால் பிழைப்பு ஓடுவதாக கூறும் இவர், தனது ஆசை கோவிலை புணரமைக்க வேண்டும், காசிக்கு நிகரான இத்தளத்தில் நித்திய பூஜை, கொடிமரம், முன் மண்டபம் இடிந்தவற்றை சீரமைக்க வேண்டும் என்பதே ஆசை என்கிறார்.
‘`நாணல்களுடன் தர்ப்பையும் அடர்த்தியாகக் காணப்பட்டதால், முற்காலத்தில் இந்த ஊருக்கு தர்ப்பாரண்யம் என்ற பெயரும் வழங்கி வந்ததாகச் சொல்கிறார்கள்.
சிவபெருமானால் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனிபகவான், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச் சந்நிதி கொண்டுள்ளதால், திருநள்ளாறு சனீஸ்வரன் தலம் என்று போற்றப் படுகிறது. இங்கும் தர்ப்பை வனம் இருந்தபடியாலும், சனீஸ்வர பகவான் சந்நிதி அமைந்திருப்பதாலும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்குத் தென் திசையில் இருப்பதாலும் இந்தத் தலம் தென் திருநள்ளாறு என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
ஐதீகம். இத்தனை சிறப்பு கொண்ட கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. இப்போது, சில சிவ அன்பர்களின் உதவியால்தான் ஒருகால பூஜையாவது நடக்கிறது’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது. நீள் செவ்வக வடிவத்தில் உள்ள அர்த்த மண்டபத்தின் 6 தூண்களும் வெடிப்புற்ற நிலையில் காணப்படுகின்றன. கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பட்டப் பெயரினைப் பெற்றவன் வீரபாண்டியன். ஆகவே, இந்த மன்னனின் காலத்தைச் சேர்ந்த கோயிலாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.
சென்னையில் தொல்லியல் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அர்ச்சுனன், இந்தக் கோயிலை ஆய்வு செய்து சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில், கோயில் 14 அல்லது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தெரிவித் திருப்பதாக கூறுகிறார் பரமசிவன்.
கோயில் கருவறையில் ஈசன் திருக்கண்டீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மேலும் ஆவுடைநாயகி அம்பாள், சிவகாமி அம்மை, சர்ப்ப பீடத்தில் அமர்ந்த கோலத்தில் விநாயகப் பெருமான் ஆகியோரும் காட்சி தருகின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் கன்னி மூலையில் கன்னி விநாயகரும், வாயு மூலையில் வள்ளி, தெய்வானை சமேதராக ஸ்ரீசுப்ரமணியரும் அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆகியோரும் தனித் தனிச் சந்நிதிகளில் திருக்காட்சி தருகிறார்கள்.
தற்போது பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் விசேஷ மாக நடைபெறுகின்றன. பிரதோஷ நாளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, மயில்கண் வஸ்திரமும், வன்னியிலை மாலை, வில்வமாலை சாத்தி, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வேலையில்லாமல் கஷ்டப்படுபவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் தடைப்பட்டவர்கள், செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிவகாமி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, பச்சைநிறப் பட்டும், பிச்சிப்பூ அல்லது மல்லிகைப்பூ மாலை சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், நல்ல இடத்தில் திருமணம் நடை பெறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
சனிக்கிழமைகளில், தாமிரபரணியில் நீராடி, சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாத்தி, எள் தீபம் ஏற்றி, கற்கண்டு நைவேத்தியம் செய்தால், சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
நாணல்காட்டை சேர்ந்த பரமசிவன் நம்மிடம், ‘`புராதனச் சிறப்பு கொண்டதும், சனிகிரக தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் திகழும் இந்தக் கோயிலுக்கு விரைவில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
சேலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion