Sevvai peyarchi: ஆட்சி பெறும் செவ்வாய்!!! ஆனந்தத்தில் மூழ்கப் போகும் ராசிகள் எவை? ராசிபலன் இதோ!
செவ்வாய் பெயர்ச்சி பலன்களை இங்கே காணலாம். 12 ராசிக்கும் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்று ஜோதிட நிபுணர் தெரிவிப்பது பற்றி விரிவாக காணலாம்.
செவ்வாய் பெயர்ச்சியில் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை ஜோதிட நிபுணர் சிம்மம் ஷாம் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷ ராசி:
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே செவ்வாய் ஆட்சி பெற்று விளங்குகிறார். முக்கியமாக சொல்லப்போனால் மலையும் மலை சார்ந்த பகுதிகளை குறிக்கக்கூடிய செவ்வாய் ரத்தத்திற்கு அதிபதி, எலும்புக்கு அதிபதி; உறுதியான பொருட்களுக்கு அதிபதி வலிமையான சண்டைகதிபதி தளபதியாய் இருக்கும் செவ்வாயின் ஆற்றல் உங்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்கலாம் . உடலில் ஆற்றல் பிறக்கும் மனம் துவண்டு இருந்தவர்கள் கூட தற்போது வாழ்க்கையில் பிரகாசிப்பார்கள் . புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் . தலைவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.
ரிஷப ராசி:
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்வதன் மூலம் சாதகமான பலன்களை நீங்கள் பெற முடியும் . செவ்வாய் ரத்தத்திற்கு அதிபதி என்பதால் நிச்சயமாக ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு இருக்குமாயின் அவை குணமாகும். திருமண வாய்ப்புகள் வீட்டு வாயிலில் வந்து சேரும் . நீண்ட நாட்களாக ஏதோ ஒரு காரணத்தால் உறக்கமில்லாமல் இருந்த உங்களுக்கு நல்ல உறக்கம் வரும் . அரசாங்க பதவிகள் உங்களுக்காக காத்திருக்கிறது வேறு ஊருக்கு சென்று அரசு பதவியில் அமர தயாராகுங்கள் .
மிதுன ராசி:
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே ஆறாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்வது நிச்சயமாக பெரிய மாற்றங்களை உங்களுக்கு கொண்டு வரும். குறிப்பாக எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள் நீண்ட நாட்களாக வம்பு வழக்குகளில் சிக்கி இருந்தால் அவை நிவர்த்தியாகும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் நண்பரை சந்திப்பீர்கள் .புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தற்போது அது சாத்தியமாகும்.
கடக ராசி:
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே..தாய் உள்ளம் கொண்ட உங்களுக்கு செவ்வாயினுடைய ஆட்சி நிச்சயமாக பெரிய மாற்றங்களை கொண்டு வரும். பத்தாம் இடத்தில் செவ்வாய் திக் பலத்தோடு ஆட்சி பெறுவது அரசுத்துறைகளில் உடனடியாக வேலை போட்டி தேர்வுகளில் வெற்றி போன்ற பிரமாதமான பலன்கள் கிடைக்கும் . ஐந்தாம் அதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் புத்திரர்கள் வழியில் நன்மை வந்து சேரும் பூர்வீகத்தால் ஆதாயம் ஒன்று குலதெய்வ அனுக்கிரகம் உருவாகும்.
சிம்ம ராசி:
அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பது ஆன்மீக குருமார்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் ஒரு காரியத்திற்காக காத்திருந்தால் அது தற்போது நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு ஒருவேளை வேலை மாற்றத்திற்காக எதிர்பார்த்தால் நிச்சயமாக வேலை மாற்றம் உண்டு . தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் புதிய தொழில் விட்டு வேறு தொழில் மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் .
கன்னி ராசி:
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே... உங்களுடைய ராசிக்கு செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறது நிச்சயமாக எட்டாம் பாவத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் நமக்கு நன்மை தராது என்று கூறுவார்கள். ஆனால், எட்டாம் பாவம் திடீர் அதிர்ஷ்டம் தனை யுகத்தை கொண்டு வருவதால் ஆட்சி பெற்ற செவ்வாய் உங்களுக்கு நிச்சயமாக தனபாக்கியத்தை கொண்டு வருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . அயல்நாடு அயல்தேசம் போக வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும் வெளியூர் வெளிநாடு மூலம் ஆதாயம் உண்டு .
துலாம் ராசி:
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே... உங்களுடைய ராசிக்கு ஏழாம் பாவத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவது நீண்ட நாட்களாக சண்டையிட்டு பிரிந்திருந்த நண்பர்கள் ஒன்று கூடுவார்கள் அதே சமயத்தில் நீங்கள் வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டிய வாய்ப்புகள் உருவாகும் . கூட்டுத் தொழில் உங்களுக்கு சாதகமாக முடியும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெறுவீர்கள் . வேறு யாருக்கேனும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் . இதில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று யாரேனும் சொன்னால் அதை தற்போது கைவிட்டு விட்டு அந்த காரியத்தை தள்ளிப் போடுவது நல்லது .
விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்கு ராசி அதிபதி செவ்வாயாகப் பட்டவர் ஆட்சி பெற்று ஆறாம் பாவத்தில் அமர்ந்திருப்பது மழை அளவு கடன் இருந்தாலும் கடுகு அளவு செடி ஆகப்போகும். ஒரு இடத்தில் கடன் வாங்கி வேறொரு பெரிய கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தற்போது அந்த காலகட்டம் வந்துவிட்டது. வீட்டில் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவீர்கள். திருமண பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும். வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடக்கும்.
தனுசு ராசி:
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் ஆட்சி தீர்க்கமான முடிவுகள் எடுப்பீர்கள் பிள்ளைகளால் ஆதாயம் உண்டு புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது அதற்கான காலம் வந்துவிட்டது . உங்களை ஏளனமாய் பேசியவர்கள் உங்களிடம் விரும்பி வந்து பேசுவார்கள் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருந்த உங்களுக்கு தொழில் பாக்கியம் உருவாகும் . பயணங்களால் ஆதாயம் உண்டு வெளியூர் வெளிநாடு போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும் வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்கும்.
மகர ராசி:
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே.. உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவதால் நிலம் வீடு மனை போன்றவற்றால் ஆதாயம் உண்டு. வாகன பிராப்தி உண்டு . நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள் உற்றார் உறவினர்களோடு குடும்பத்தோடு நேரம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். மகர ராசிக்கு 11 ஆம் அதிபதி நான்காம் வீட்டில் ஆட்சி பெறுவதால் மனதில் நிம்மதி பிறக்கும்.
கும்ப ராசி:
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே.. உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவதால் நீங்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி தான் கிடைக்கப் போகிறது. தைரியமான பல முடிவுகளை எடுத்து அதன் மூலம் வெற்றி இலக்கை எளிதாக அடையப் போகிறீர்கள் வாழ்க்கையில் எதை சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தீர்களோ அதை சாதிப்பதற்கான காலகட்டம் ஆட்சி பெற்ற செவ்வாய் உங்களுக்கு பத்தாம் அதிபதி ஆவதால் அரசாங்க உத்தியோகம் வீட்டு வாயில் தேடி வரும்.
மீன ராசி:
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே... உங்களுடைய ராசிக்கு 9 ஆம் அதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெறுவது சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும் . இரண்டாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெறுவதால் உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு கௌரவம் கிடைக்கும் . அரசு துறைகளில் உங்களுக்கு வேலை கிடைக்கும் . வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடந்திடும் . சம்பாதிக்கும் பணம் கையில் போதவில்லை என்று நினைப்பவர்களுக்கு தற்போது இரண்டாம் இடத்தில் செவ்வாய் அதிகப்படியான பணத்தை உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கப் போகிறார் . தொழில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் . . வியாபாரத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள் .