சைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ள 10 நாடுகள்

Published by: ABP NADU

உலகம் முழுவதும் சைவம் எனும் உணவு உண்ணும் பழக்கம் பிரபலமடைந்து வருகிறது. சுற்றுசூழல், ஆரோக்கியம், நெறிமுறைகள் போன்றவற்றுக்காக சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியா

38% சைவ உணவு உண்பவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமான சைவ உணவாளர்களை கொண்டுள்ளது.

இஸ்ரேல்

உலகில் அதிக சைவ பிரியர்கள் இருக்கும் நாடுகளில் ஒன்று. 13% சைவ மக்கள் வாழுகின்றனர்.

தைவான்

புத்த பாரம்பரியம் ஏற்படுத்திய தாக்கத்தினால் 12% மக்கள் சைவ பிரியர்களாக உள்ளனர். சைவ தைவான் உணவுகள் எல்லோருக்கும் பிடித்தமானவை என்று கூறப்படுகிறது.

இத்தாலி

10% மக்கள் சைவ உணவுகளை தேர்வு செய்துள்ளனர். ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுகளை மக்கள் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரியா

சுற்றுசூழல் காரணமாகவும் ஆரோக்கியம் காரணமாகவும் சைவ பிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 9% மக்கள் சைவ உணவாளர்களாக உள்ளனர்.

ஜெர்மனி

சுற்றுசூழலை நிலைபேணுவதற்காக மக்கள் சைவ உணவுகளை உண்பதாக கூறுகின்றனர். 9% மக்கள் சைவ உணவு உண்பவர்களாக மாறியுள்ளனர்.

இங்கிலாந்து

நகர்புறங்களில் உள்ளவர்கள் அதிகம் சைவ உணவுகள் விரும்புகின்றனர். 9% மக்கள் சைவ பிரியர்கள்.

பிரேசில்

8% மக்கள் சைவ பிரியர்கள். ஆரோக்கியம் காரணமாக சைவ உணவுகளை தேர்வு செய்கின்றனர்.

அயர்லாந்து

சைவ உணவு பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்பொழுது 6% மக்கள் சைவ உணவாளர்களாக உள்ளனர்.

ஆஸ்திரேலியா

சைவ உணவு உண்பவர்கள் மற்றும் Vegans-ன் எண்ணிக்கைகள் அதிகரிக்கின்றன. 5% மக்கள் சைவ பிரியர்களாக உள்ளனர்.