Rasi Palan Today, June 14 : ரிஷபத்துக்கு செலவு..! மகரத்துக்கு அலைச்சல்..! அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி..?
Today Rasipalan : இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 14.06.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இராகு :
மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள் ஆகும். தொழிலில், வேலையில் உரிய அங்கீகாரம் கிட்டும். நீண்ட நாள் வசூலாகாத கடன் வசூலாகும். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் தேவையில்லாத வீண் செலவு உண்டாகும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். அடுத்தவர் கடனுக்கு உத்தரவாதம் தரக்கூடாது. குடும்பத்தில் பொறுமையையும், அமைதியையும் கடைபிடிப்பது நல்லது. சிவபெருமானை வணங்கி சிறப்படையலாம்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று அமைதியை கடைபிடிக்க வேண்டும். வீண் விவகாரங்களில் தலையிடக்கூடாது. நண்பர்கள், உற்றத்தாரிடம் சுதாரிப்புடன் செயல்பட வேண்டும். ஈசனை வணங்கினால் மனதில் உள்ள குழப்பங்கள் தீரும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு நன்மையான நாள் ஆகும். வீட்டில் நீடித்து வந்த பிரச்சினை தீர்வுக்கு வரும். உடலில் நீடித்து வந்த சிக்கல் தீரும். ஆலய வழிபாடு அமைதி தரும். பிள்ளைகளால் இனிப்பான செய்தி வந்து சேரும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாள் ஆகும். நல்லவர்கள் நட்பு கிட்டும். தொழிலில், வியாபாராத்தில் புதிய முயற்சி எடுப்பீர்கள். கடன் பிரச்சினை தீரும். வாகன யோகம் உண்டாகும். வீட்டில் நீடித்து வந்த சிக்கல் தீரும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு ஆரோக்கியமான நாளாக அமையும். நீண்டகாலமாக உடலில் நீடித்து வந்த சிக்கல் தீரும். மனதிற்கு பிடித்த காரியங்களை செய்வீர்கள். வேலைவாய்ப்பில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களுக்கான நிகழ்வுகள் தொடங்கும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகும். மாணவர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு அற்புதமான நாளாகும். பணவரவு, தன வரவு உண்டாகும். தொலைபேசி வழித்தகவல்களால் நன்மை உண்டாகும். மனதில் புதிய சந்தோஷம் குடிகொள்ளும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அன்பு அதிகரிக்கும். பெற்றோர்கள் - பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லும் சூழல் உண்டாகும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மனநிறைவான நாள் ஆகும். எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்து மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும். காதல் கைகூடும். தொழிலில், வியாபாரத்தில் நீடித்து வந்த பகை நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் நிகழாததால் வீண் மன உளைச்சல் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். மனச்சோர்வு, உடல்சோர்வு உண்டாகும். ஓய்வு எடுத்தால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் ஏற்படும். அம்மனை வழிபட்டு அமைதி காணலாம்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆலயத்திற்கு செல்லும் யோகம் கிட்டும். ஈசனை வணங்கி மன அமைதி காண்பீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம் சீராகும். பகைகள் விலகி நட்பு வலுக்கும். மங்கல ஓசை விரைவில் ஒலிக்கும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமையும். எதிர்பார்த்த ஓய்வு கிட்டும். பணிச்சுமை குறையும். மனதில் நீடித்து வந்த குழப்பங்களும் தீரும். தொலைதூர தேசத்திற்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்