Rasipalan 09 June, 2023: மகரத்துக்கு லாபம்... சிம்மத்துக்கு ஓய்வு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!
RasiPalan Today June 09: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 09.06.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.
ரிஷபம்
எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை உண்டாகும். சமூகப் பணிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சிகள் கைகூடும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
மிதுனம்
உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். சோர்வு விலகும் நாள்.
கடகம்
எதிர்பார்த்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
சிம்மம்
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தவறிப்போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் ஈடேறும். ஓய்வு நிறைந்த நாள்.
கன்னி
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான குழப்பங்கள் குறையும். மனதில் தீர்க்கமான முடிவுகள் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். பயணம் நிறைந்த நாள்.
துலாம்
கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
விருச்சிகம்
உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதைத் தவிர்க்கவும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். அன்பு நிறைந்த நாள்.
தனுசு
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். செல்வாக்கு நிறைந்த நாள்.
மகரம்
தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
கும்பம்
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உள்ளூர் பயண வாய்ப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது என்ற எண்ணங்கள் மேம்படும். பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
மீனம்
வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பீர்கள். கடன்களைக் குறைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வரவுகள் நிறைந்த நாள்.