Rasipalan 7 August , 2023: சிம்மத்துக்கு உதவி...மிதுனத்துக்கு லாபம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today 7 August: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 07.08.2023 - திங்கள் கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை:
மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிலும் தாழ்வுமனப்பான்மையின்றி செயல்படவும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.
ரிஷபம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளால் தாமதம் உண்டாகும். உடல் அசதிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
நினைத்த பணிகள் ஈடேறும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.
கடகம்
நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். தடைகள் குறையும் நாள்.
சிம்மம்
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
கன்னி
குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்துவதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். சாந்தம் வேண்டிய நாள்.
துலாம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
விருச்சிகம்
எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்க காரியங்கள் நிறைவுபெறும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கனிவான பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். சிக்கல் குறையும் நாள்.
தனுசு
குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மகரம்
எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். சக ஊழியர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். கால்நடைகளின் மூலம் லாபம் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவுபெறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
கும்பம்
சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காது தொடர்பான இன்னல்கள் குறையும். போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. இசை சார்ந்த துறைகளில் முனேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்பு அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
மீனம்
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தடைபட்ட வரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணியாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இரக்கம் வேண்டிய நாள்.