Rasipalan Today: கடகத்துக்கு திருப்தி... கன்னிக்கு பாசம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்
RasiPalan Today March 06: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 06.03.2023 - திங்கள் கிழமை
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மதியம் 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
கலை சார்ந்த பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான சூழ்நிலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிடிவாத குணத்தினை குறைத்து கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.
ரிஷபம்
தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். ஆரோக்கியம் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். பலதரப்பட்ட மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.
மிதுனம்
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் உண்டாகும். கடினமான சூழ்நிலையை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். தாமதம் விலகும் நாள்.
கடகம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் காரியசித்தி உண்டாகும். பிரீத்தி நிறைந்த நாள்.
சிம்மம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதில் லாபம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
கன்னி
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். ரகசியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பாசம் நிறைந்த நாள்.
துலாம்
வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
விருச்சிகம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றியும், உலகியல் வாழ்க்கையை பற்றியும் புரிதல் ஏற்படும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களை பகிராமல் இருப்பது நல்லது. கவனம் வேண்டிய நாள்.
தனுசு
நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகளால் மேன்மை ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
மகரம்
எண்ணிய சில பணிகள் செய்வதில் காலதாமதம் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்படும். குழந்தைகள் வழியில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் அமையும். நிர்வாக துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கால்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
கும்பம்
உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
மீனம்
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் திடீர் திருப்பம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். தந்தையின் தொழிலால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் கைகூடும் நாள்.