Rasipalan 30 August: கன்னிக்கு நன்மை...மகரத்துக்கு அமைதி...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!
RasiPalan Today August 30: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 30.08.2023 - புதன் கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை
இராகு:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
நினைத்த காரியங்கள் ஈடேறும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். சுகம் நிறைந்த நாள்.
ரிஷபம்
நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்பாராத இடமாற்றம் நேரிடலாம். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.
கடகம்
மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
சிம்மம்
சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தாமதம் விலகும் நாள்.
கன்னி
பொருளாதார சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள். பணி நிமிர்த்தமான கருத்துகளுக்கு ஆதரவு மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சில பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
துலாம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பிறமொழி பேசும் மக்கள் சாதகமாக இருப்பார்கள். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
விருச்சிகம்
நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய வீடு கட்டுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.
தனுசு
வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். செயல்களில் இருந்துவந்த தடுமாற்றம் மறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். கவலைகள் விலகும் நாள்.
மகரம்
செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.
கும்பம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை உண்டாகும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.
மீனம்
பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பழைய விஷயங்களால் குழப்பம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.