மேலும் அறிய

Rasipalan 29 August: ரிஷபத்துக்கு தனம்.. மிதுனத்துக்கு அமைதி.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today August 29: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 29.08.2023 -  செவ்வாய் கிழமை

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல்  பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வாகனப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

ரிஷபம்

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.

மிதுனம்

பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். கல்வியில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.

கடகம்

மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.

சிம்மம்

பணி நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துகளில் தீர ஆலோசித்து முடிவெடுக்கவும். உதவிகள் கிடைக்கும் நாள்.

கன்னி

வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதளவில் பக்குவமும், புரிதலும் அதிகரிக்கும். உறுதி நிறைந்த நாள்.

துலாம்

வியாபாரப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரப் பணிகளில் சுமாரான வரவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் உள்ள தடைகள் விலகும். பணிவு வேண்டிய நாள்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  ஆர்வம் நிறைந்த நாள்.

மகரம்

மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான விஷயங்களில் விவேகம் வேண்டும். சுபகாரியங்களில் அனுசரித்துச் செல்லவும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். தெளிவு நிறைந்த நாள்.

கும்பம்

அவசரமின்றி எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். போட்டிகள் மேம்படும் நாள்.

மீனம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget