Rasipalan September 28:கன்னிக்கு நேர்மை..மகரத்திற்கு துணிவு… இன்றைய ராசி பலன்கள்
Rasipalan September 28: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 28.09.2022
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு:
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் –வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, உங்கள் லட்சியங்களை பூர்த்தி செய்துகொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள். உங்கள் பணியில் நீங்கள் மிகப் பெரிய வெற்றியை காண்பீர்கள். உங்கள் பணிகளை ஒழுங்கான முறையில் கவனமாக ஆற்றுவீர்கள். இன்று பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும் நாள். சூழ்நிலைகள் உங்கள் வெற்றிக்கு சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருப்பீர்கள். இன்று விரைந்து வேலையை முடிக்க வேண்டும் என்று முனைவீர்கள். இதனால் நல்ல தரத்துடன் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. இன்று சில எதிர்பாராத நன்மைகள் நடக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். திறமையாகப் பணியாற்றுவதற்கு இன்று பொறுமை அவசியம்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். முக்கிய முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுவது சிறந்தது. சிறந்த இசையைக் கேட்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும். பணியிடச் சூழல் இன்று அனுகூலமாக இருக்காது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்கள் பணிகள் சுமூகமாக நடக்க சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்கள் வளர்ச்சிக்கு சாதகமான நாள். இன்று செயல்கள் அனைத்தும் சுமூகமாக நடக்கும். ஆன்மீக ஈடுபாடு நன்மை பயக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இன்றைய நாள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.கணிசமான தொகை சேமிப்பீர்கள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று கடினமான சூழல் காணப்படும். நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும். உங்கள் எதிர் காலம் குறித்த தேவையற்ற பயம் காரணமாக பணியிடத்தில் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். அமைதியாகவும் உற்சாகத்துடனும் பணியை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டிய நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று எதிர்பார்த்த பலன் கிட்டாது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பிரார்த்தனை மற்றும் ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும். உங்கள் பணிகளைக் கையாளும் போது பொறுமை தேவை. உங்கள் சக பணியாளர்கள் மூலம் சில தொந்தரவுகளை எதிர்கொள்வீர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் இலக்குகளை அடைவதில் இன்று தாமதம் ஏற்படும். எனவே உங்கள் இலக்குகளை சிறப்பாக திட்டமிட வேண்டியது அவசியம். இன்று சில மாற்றங்கள் ஏற்படும். அனால் அவை முழு அளவில் நன்மை அளிக்காது. பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். பணியிடச் சூழல் சவாலானதாக இருக்கும். பக்குவமான மனநிலையில் பணிகளை மேற்கொள்ளுங்கள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்று பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்று நிதிநிலைமை ஸ்திரமாக இருக்கும். பணத்தை சுப காரியங்களுக்கு செலவு செய்யும் வாய்ப்பு உள்ளது.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியான உற்சாகமான தருணங்கள் காணப்படும். உங்கள் சுய முயற்சி மூலம் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். இன்று வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் காணப்படும். பணியில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீங்கள் பணிகளை திறமையாக கையாள்வீர்கள். ஒழுங்கு முறையான அணுகுமுறை உங்களிடம் காணப்படும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. எதிர்காலம் குறித்த கவலையும் பயமும் காணப்படும். பிரார்த்தனை மற்றும் தியானம் சிறந்த பலன் தரும். பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திறமையாக சவால்களை கையாள வேண்டும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்றைய சூழல் அதிருப்தியை அளிக்கும். அதிகமான சிந்தனையை தவிர்க்க வேண்டும். சமநிலையோடு இருக்க வேண்டும். உங்கள் மேலதிகாரிகளுடன் விரும்பத்தகாத சூழல் காணப்படும். எனவே பணியிடத்தில் ஒழுங்குமுறையுடன் பணியாற்ற வேண்டியது நல்லது.