Rasi Palan Today August 26: கன்னிக்கு விலகும் குழப்பம்; விருச்சிகத்துக்கு உதவி: இன்றைய ராசிபலன்கள்!
Rasi Palan Today August 26: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 26.08.2022
நல்ல நேரம் :
காலை 9.45 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம் :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே,
சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். நவீன பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே,
சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மாற்றம் நிறைந்த நாள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே,
உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பேச்சு திறமையின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மேன்மை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். தெளிவு பிறக்கும் நாள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே,
தன்னம்பிக்கையுடன் சில முடிவினை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். வாதங்களில் பொறுமையை கையாளுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே,
வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். கௌரவ பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சமூகம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே,
தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். குழப்பம் விலகும் நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே,
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே,
தந்தையிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயகரமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கனிவான பேச்சுக்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே,
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். ஊக்கம் வேண்டிய நாள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே,
மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே,
உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே,
தாய்வழி உறவினர்களின் மூலம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் ஆதரவுகளால் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.