Rasipalan 24, June 2023: விருச்சிகத்துக்கு வெற்றி... கடகத்துக்கு உழைப்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today June 24: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 24.06.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். வருமான முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழப்பம் விலகும் நாள்.
ரிஷபம்
எதிர்பாராத சில வேலைகள் முடிவுபெறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
மிதுனம்
வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பணி நிமிர்த்தமான இடமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் விலகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். கனிவு வேண்டிய நாள்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பது மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகத்தால் உற்சாகம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.
சிம்மம்
தொழில் நிமிர்த்தமான திட்டங்கள் கைகூடும். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகப் பணிகளில் இருந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
கன்னி
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். இறை சார்ந்த பணிகளால் மதிப்பு அதிகரிக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம்
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.
விருச்சிகம்
உழைப்பிற்கேற்ற மதிப்பு கிடைக்கும். நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்பாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள்.
தனுசு
புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். லாபகரமான நாள்.
மகரம்
வியாபார பணிகளில் போட்டி உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலையை அறிந்து செயல்படவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைவர் வழியில் அனுசரித்துச் செல்லவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
கும்பம்
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பள்ளிப் பருவ நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மீனம்
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.