Rasipalan: கடகத்துக்கு நிம்மதி... மிதுனத்துக்கு செலவு.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today April 21: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 21.04.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
மனதில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தனம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. புதிய முடிவினை எடுக்கும் பொழுது பதற்றமின்றி செயல்படவும். செய்யும் முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். நெருக்கமானவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். பணி நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் உழைப்புகள் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
மிதுனம்
எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசு காரியங்களில் துரிதம் ஏற்படும். தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் நிறைவுபெறும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் மத்தியில் அனுசரித்து செல்லவும். செலவு உண்டாகும் நாள்.
கடகம்
அரசு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். முழங்கால் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்வது தொடர்பான முயற்சிகள் கைகூடும். நிம்மதி நிறைந்த நாள்.
சிம்மம்
தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக ரீதியான பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த மறைமுகமான தடைகள் விலகும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் கிடைக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
கன்னி
தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தனவரவுகள் கிடைப்பதில் இழுபறியான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.
துலாம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுயதொழிலில் சார்ந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வியாபார ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.
விருச்சிகம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.
தனுசு
கலை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிற்றின்பம் சார்ந்த செயல்களால் விரயங்கள் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
மகரம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் அமையும். பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
வீடு, மனை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். ரசனை தன்மையில் மாற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு திருத்தலம் நிமிர்த்தமான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்வு உண்டாகும் நாள்.
மீனம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடலில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சூழ்நிலைகளை அறிந்து விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது கவனம் வேண்டும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.