மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Sept 27: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, September 27: செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 27, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் மறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
ரிஷப ராசி
மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்ப்பு மறையும் நாள்.
மிதுன ராசி
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.
கடக ராசி
மற்றவர்களை பற்றிய கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். கல்வி பணிகளில் பொறுமை வேண்டும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல் அதிகரிக்கும். துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். நண்பர்களின் கருத்துகளை புரிந்து முடிவெடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வங்கி செயல்களில் பொறுமை வேண்டும். புகழ் மேம்படும் நாள்.
கன்னி ராசி
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வருங்கால சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளால் மதிப்பு அதிகரிக்கும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதிகள் மேம்படும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் மறையும். இயந்திர பழுதுகளை சரி செய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். சேவை துறைகளில் இருப்போர்க்கு மேன்மை ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
விருச்சிக ராசி
ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார நிலுவை பாக்கிகள் வசூலாகும். சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். மறதி விலகும் நாள்.
தனுசு ராசி
உரையாடும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். காப்பீடு சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். எழுத்து துறைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
மகர ராசி
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமான பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
கும்ப ராசி
ஆரோக்கிய இன்னல்கள் குறையும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் பணி மாற்ற சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத தன வரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நெருக்கமானர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். மனதளவில் தைரியம் பிறக்கும். அசதி விலகும் நாள்.
மீன ராசி
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion