மேலும் அறிய

Rasi Palan Today, Sept 25: மேஷத்துக்கு தன்னம்பிக்கையான நாள், ரிஷபத்துக்கு லாபகரமான நாள்: உங்கள் ராசிக்கான பலன்

Rasi Palan Today, September 25: செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 25, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயமடைவீர்கள். நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். நலம் நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வாக்கு சாதுரியத்தின் மூலம் நன்மை ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்ப நபர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். லாபம் கிடைக்கும் நாள்.
 
மிதுன ராசி
 
எதிர்மறையான சிந்தனைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மத்தியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழுதான வாகனங்களை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் ஈடேறும். பொறுமை வேண்டிய நாள்.
 
 கடக ராசி
 
சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
 
 சிம்ம ராசி
 
தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் மேம்படும். பிரிந்த உறவினர்கள் வலிய வருவார்கள். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
பயணங்களின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். அரசு வழியில் உதவிகள் சாதகமாக அமையும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நட்பு வட்டாரம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள்.
 
 துலாம் ராசி
 
வெளி வட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சலனம் மேம்படும் நாள்.
 
விருச்சிக ராசி
 
குழந்தைகளால் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி நிறைவேறும். பொழுதுபோக்கு செயல்களால் கையிறுப்புகள் குறையும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்கவும். கவனம் வேண்டிய நாள்.
 
தனுசு ராசி
 
நண்பர்களின் வருகை மனதிற்கு மனநிறைவை கொடுக்கும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். மனை விற்றல், வாங்கலில் லாபம் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.
 
மகர ராசி
 
எந்த காரியத்தையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் மறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். தேர்ச்சி மேம்படும் நாள்.
 
கும்ப ராசி
 
மனதில் சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக ஏற்ற, இறக்கம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக செலவுகள் ஏற்படும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. படிப்பில் இருந்துவந்த மந்த நிலை சற்று மறையும். புகழ் மேம்படும் நாள்.
 
மீன ராசி
 
உடல் நிலையில் சற்று மந்த நிலை ஏற்படும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். நற்செயல் நிறைந்த நாள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?
காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?
Embed widget