மேலும் அறிய

Rasipalan Today Oct 27: தனுசுக்கு சகோதரர்கள் ஆதரவு! விருச்சிகத்துக்கு பயணம் - உங்கள் ராசிக்கான பலன்?

Rasi Palan Today, October 27: அக்டோபர் மாதம் 27ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 27, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நிறைவு நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
உறவினர்களின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கால்நடை வளர்ப்பு பற்றிய எண்ணங்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயத் துறைகளில் மேன்மை ஏற்படும். மேன்மை நிறைந்த நாள். 
 
மிதுன ராசி
 
மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான சில விஷயங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பாகப் பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
 
 கடக ராசி
 
மனதில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் வழியில் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பயணங்களின் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். அடமான பொருட்கள் பற்றிய கவலைகள் ஏற்படும். தனவரவுகள் மூலம் வங்கி இருப்புகள் அதிகரிக்கும். அசதி விலகும் நாள்.
 
 சிம்ம ராசி
 
குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரச் செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
உடன்பிறந்தவர்களிடத்தில் அன்பு அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவு செய்வீர்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான  சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். வியாபாரத்தில் பற்று வரவு மேம்படும். உழைப்புக்கு  உண்டான மதிப்பு கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வரவு மேம்படும் நாள்.
 
விருச்சிக ராசி
 
மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆக்கப்பூர்வமான நாள்.
 
தனுசு ராசி
 
உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். குழந்தைகளின் உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  அனுகூலம் நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். விவேகம் வேண்டிய நாள்.
 
கும்ப ராசி
 
வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் இருந்துவந்த கருத்துகளை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். அனுபவம் மேம்படும் நாள்.
 
மீன ராசி
 
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Embed widget