மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Oct 13: மேஷத்துக்கு பாராட்டு; கடகத்துக்கு கவனம்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, October 13: அக்டோபர் மாதம் 13ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 13, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
கனிவான பேச்சுக்கள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழிலில் லாபகரமான சூழல் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
ரிஷப ராசி
வசதிகளை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் மேம்படும். நற்சொல் வேண்டிய நாள்.
மிதுன ராசி
காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
கடக ராசி
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளியூர் வர்த்தக செயல்களில் ஆர்வம் ஏற்படும். புதுமையான செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கற்பனை துறைகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
சிம்ம ராசி
சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். வர்த்தக முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். பேச்சுத் திறமையால் தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். பாசம் நிறைந்த நாள்.
கன்னி ராசி
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தீரும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். நம்பிக்கை நிறைந்த நாள்.
துலாம் ராசி
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குலதெய்வ பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நலம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் வருமானம் கிடைக்கும். தூர தேச பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
தனுசு ராசி
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவமிக்க வேலையாட்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரவு நிறைந்த நாள்.
மகர ராசி
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணைய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
கும்ப ராசி
மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் ஏற்படும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.
மீன ராசி
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். வெளியூரிலிருந்து வரும் மகிழ்ச்சியான செய்திகள் திருப்தியை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு விரயங்கள் ஏற்படும். மறதி நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion