மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Oct 11: சிம்மத்துக்கு போட்டி; கன்னிக்கு தெளிவு: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, October 11: அக்டோபர் மாதம் 11ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 11, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
கல்வியில் மேன்மை ஏற்படும். குழந்தைகளிடம் கனிவு வேண்டும். அறப்பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு புது உற்சாகத்தைக் கொடுக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
ரிஷப ராசி
வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
மிதுன ராசி
பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் வருத்தம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கருத்தை நிதானமாக சொல்வது நன்மை தரும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விவேகம் வேண்டிய நாள்.
கடக ராசி
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் புதுவிதமான நுட்பங்களுடன் லாபத்தை மேம்படுத்துவீர்கள். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
சிம்ம ராசி
இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். உணர்வுப்பூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். போட்டி நிறைந்த நாள்.
கன்னி ராசி
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
துலாம் ராசி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில முடிவுகள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.
தனுசு ராசி
குடும்பத்தில் புதிய நபர்களினால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அரசு சார்ந்த நிலைபாடுகளை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
மகர ராசி
மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பழைய நினைவுகள் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். அரசு துறையில் பணிபுரிபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். மேன்மை நிறைந்த நாள்.
கும்ப ராசி
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மீன ராசி
மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion