மேலும் அறிய

Rasi Palan Today, Oct 10: மிதுனத்துக்கு நிம்மதி! கடகத்துக்கு கடன் பிரச்னை குறையும்- உங்கள் ராசிக்கு?

Rasi Palan Today, October 10: அக்டோபர் மாதம் 10ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 10, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் உயர்கல்வி சார்த்த ஆலோசனைகள் கிடைக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.
 
ரிஷப ராசி
 
மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
 
மிதுன ராசி
 
வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பூர்வீகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிம்மதி நிறைந்த நாள்.
 
 கடக ராசி
 
பயணம் தொடர்பான செயல்களில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனை வாங்குதல் மற்றும் விற்றல் பணிகளில் மேன்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நன்மை உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சாந்தம் நிறைந்த நாள்.
 
 சிம்ம ராசி
 
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். திறமைக்கேற்ப வாய்ப்புகள் அமையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் பிறக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். பாசம் நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
 
விருச்சிக ராசி
 
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். முயற்சி மேம்படும் நாள்.
 
தனுசு ராசி
 
சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சாப்பாடு விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். திடீர் செய்திகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத அலைச்சல் மூலம் சோர்வு உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
 
கும்ப ராசி
 
வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகளும், ஒத்துழைப்பும் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள்.
 
மீன ராசி
 
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். பக்தி நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget