மேலும் அறிய
Advertisement
Rasipalan Today Nov 18: மேஷத்திற்கு தெளிவு; ரிஷபத்திற்கு லாபம் - உங்களின் ராசிபலன்.!
Rasi Palan Today, November 18: இன்று கார்த்திகை மாதம் 3ம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 18, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமித்தமான நவீன கருவிகளைக் கொள்முதல் செய்வீர்கள். கொடுக்காமல் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.
ரிஷப ராசி
கனிவான பேச்சுக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மிதுன ராசி
நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கவும். கலைத் துறைகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மலரும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கால்நடை விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
கடக ராசி
நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். சமூகப் பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரமான செலவுகளைத் தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். இரவு சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கவலை விலகும் நாள்.
சிம்ம ராசி
வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வரவு நிறைந்த நாள்.
கன்னி ராசி
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வீடு பராமரிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். தொழில் நிமித்தமான அலைச்சலால் அனுபவம் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயணம் கைகூடும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இன்னல்கள் மறையும் நாள்.
துலாம் ராசி
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் பொறுப்புகள் மேம்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆலய வழிபாடுகள் மூலம் மனத் தெளிவுகள் உண்டாகும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உறுதி வேண்டிய நாள்.
விருச்சிக ராசி
நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் இனம் புரியாத தேடல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் தாமதம் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
தனுசு ராசி
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள்.
மகர ராசி
கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும். பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். செலவு நிறைந்த நாள்.
கும்ப ராசி
வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும். உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.
மீன ராசி
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புத்திரர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எளிமையான பணிகள் கூட தாமதமாக முடியும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனை கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion