Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
Today Rasipalan: மே மாதம் 16ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 16.05.2024
கிழமை: வியாழன்
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுபம் நிறைந்த நாள்.
ரிஷபம்
தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உறவுகளின் வழியில் சில புரிதல் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
மிதுனம்
பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
கடகம்
செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் மந்தமான சூழல் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் ஏற்படும் நாள்.
கன்னி
புதுவிதமான பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எந்த ஒரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.
துலாம்
இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்யும் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கலை சார்ந்த செயல்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அனுபவம் மேம்படும் நாள்.
விருச்சிகம்:
மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
தனுசு
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தர்ம காரியங்களில் ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். அலைச்சல் நிறைந்த நாள்.
மகரம்
மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் கோபமின்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை காக்கவும். உதாசினமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.
கும்பம்
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை விலகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
மீனம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சூழல் உண்டாகும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பக்தி நிறைந்த நாள்.